Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும்
Inji Thogayal Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் போன்றவை சரியான காம்பினேஷனாக இருக்கும். நீங்கள் சட்னி தான் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? வழக்கமான சட்னி செய்யாமல் புதிதாக ஏதாவது சட்னி செய்ய விரும்புகிறீர்களா?

உங்கள் வீட்டில் இஞ்சி அதிகம் உள்ளதா? அப்படியானால் அந்த இஞ்சியை வைத்து ஒரு அட்டகாசமான தொகையலை செஞ்சு பாருங்க. அதுவும் நீங்கள் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை இந்த ஸ்டைலில் தொகையலை செய்யுங்கள். இப்படி இஞ்சி தொகையல் செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி பேச்சுலர்களும் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். இது இட்லி,, தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். இந்த தொகையால் சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட.
உங்களுக்கு இஞ்சி தொகையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இஞ்சி தொகையலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- நறுக்கிய இஞ்சி - 4 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- புளி - ஒரு சிறிய துண்டு
- வர மிளகாய் - 2
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- தேங்காய் - 1 ஸ்பூன்
- பெருங்காயம் - 2 சிட்டிகை
செய்முறை:
- ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் உளுத்தம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாயைச் சேர்க்கவும்.
- உளுத்தம் பருப்பின் நிறம் மாறத் தொடங்கியதும், புளி மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
- பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதை தனியாக எடுத்து வைக்கவும்.
- பின் அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும், அதன்பின் நறுக்கிய இஞ்சியைச் சேர்க்கவும்.
- குறைந்த தீயில் ஒரு நிமிடம் வதக்கவும். பின் இதையும் தனியாக எடுத்து வைக்கவும்.
- தேங்காய், பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றுடன் வதக்கிய மற்ற பொருட்கள் அனைத்தையும் மிக்சியில் போடவும். அதிக தண்ணீர் சேர்க்காமல் இதை கொரகொரப்பாக அரைக்கவும்.
- அவ்வளவுதான் இஞ்சி தொகையல் ரெடி. இதை காற்றுப்புகாத கொள்கலனில் எடுத்து வைத்தால் ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
- இதில் கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்தால் மேலும் சுவையாகவும், நறுமணமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
