Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
சுதந்திர தினமான இன்னைக்கு இட்லி, தோசைக்கு இந்த மூவர்ண தேங்காய் சட்னியை ட்ரை பண்ணி பாருங்க..
Independence Day 2024 Special Recipe: சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஸ்பெஷலாக சமைத்துக் கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலையில் எப்போதும் போன்று தோசை அல்லது இட்லி தான் செய்யப் போகிறீர்களா?
அப்படியானால் அதற்கு சைடு டிஷ்ஷாக மூவர்ண தேங்காய் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுதந்திர தின கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு மூவர்ண தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மூவர்ண தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை தேங்காய் சட்னிக்கு...
* தேங்காய் - 1/4 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 6
* இஞ்சி - 1 இன்ச்
* பச்சை மிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
பச்சை தேங்காய் சட்னிக்கு...
* தேங்காய் - 1/4 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - 1 இன்ச்
* கறிவேப்பிலை - 3 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
ஆரஞ்சு தேங்காய் சட்னிக்கு...
* வரமிளகாய் - 3
* பூண்டு - 4 பல்
* புளி - சிறிய துண்டு
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் வெள்ளை தேங்காய் சட்னிக்கு மிக்சர் ஜாரில் தேங்காய்,
பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், முந்திரி, இஞ்சி, சுவைக்கேற்ப உப்பு
மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பச்சை தேங்காய் சட்னிக்கு அதே ஜாரில் தேங்காய்,
பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்து, அதை மற்றொரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு வரமிளகாய் சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஆரஞ்சு தேங்காய் சட்னிக்கு அதே ஜாரை எடுத்து, அதில் ஊற
வைத்துள்ள வரமிளகாய், பூண்டு, புளி, பொட்டுக்கடலை, தேங்காய் மற்றும்
சுவைக்கேற்க உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்து, அதையும் ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து
தாளித்து, சட்னிகளின் மேல் சிறிது சிறிதாக ஊற்றினால், சுவையான மூவர்ண
தேங்காய் சட்னி தயார்.
Image Courtesy: Creative World



Click it and Unblock the Notifications
