Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
மீந்து போன இட்லி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிடத்தில் இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்..
Idli Vada Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் சுட்டு வைத்த இட்லி மீந்து போயிருக்கா? அப்படி இட்லி மீந்து போனால் அதை கொண்டு இதுவரை உப்புமா தான் செய்திருப்பீர்கள். ஆனால் அந்த மீந்து போன இட்லியைக் கொண்டு மாலை வேளையில் அருமையான சுவையில் வடையை சுடலாம் என்பது தெரியுமா?
இப்படி இட்லி கொண்டு செய்யப்படும் வடை, உளுந்து கொண்டு தயாரிக்கப்படும் வடையைப் போன்று மொறுமொறுவென்று இருக்கும். அதோடு ஒருமுறை இப்படி வடையை செய்தால், பின் எப்போதும் இப்படி தான் வடையை செய்து சாப்பிடுவீர்கள்.

உங்களுக்கு மீந்து போன இட்லி கொண்டு எப்படி வடை செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன இட்லி - 6
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மீந்து போன இட்லிகளை நன்கு உதிர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அத்துடன் அரிசி மாவு, 1/4 டீஸ்பூன் உப்பு, பொடியாக நறுக்கிய
கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி, கைகளால் நன்கு
பிசைந்து விட வேண்டும்.
* பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை தெளித்து, சப்பாத்தி மாவை விட
சற்று மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் கையில் சிறிது எண்ணெயை தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை
கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, தட்டையாக தட்டி, நடுவே துளையிட்டு
ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடையை போட்டு,
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான இட்லி வடை தயார்.



Click it and Unblock the Notifications