Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
ஈவ்னிங் முட்டைக்கோஸ் வெச்சு ஒருடைம் வடை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
Cabbage Vadai Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? அதுவும் உங்கள் குழந்தைகள் வடையை விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் எப்போதும் ஒரே மாதிரியான வடை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் வடை செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் உள்ளதா? அப்படியானால் அந்த முட்டைக்கோஸ் கொண்டு வடை செய்யுங்கள். இந்த முட்டைக்கோஸ் வடை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் வழக்கமாக செய்யும் வடையை விட வித்தியாசமான சுவையில் இருக்கும்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டைக்கோஸ் - 1/4 கிலோ
* கடலைப் பருப்பு - 1 கப்
* வரமிளகாய் - 2
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 5 பல்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கடலைப்பருப்பை சுடுநீரில் போட்டு 20 நிமிடம் மூடி வைத்து
ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் முட்டைக்கோஸை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வரமிளகாய், பச்சை மிளகாய், பூண்டு சோம்பு
ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஊற வைத்துள்ள கடலைப்பருப்பில் பாதியை ஜாரில் சேர்த்து சற்று
கொர கொரவென்று அரைத்து, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே ஜாரில் மீதமுள்ள கடலைப்பருப்பை சேர்த்து ஓரளவு மென்மையாக
அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த வடை கலவையில் சுவைக்கேற்ப உப்பு, பெருங்காயத் தூள்,
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கைகளால்
நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து உருட்டி வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக
பொரித்து எடுத்தால், சுவையான முட்டைக்கோஸ் வடை தயார்.



Click it and Unblock the Notifications