Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்.. -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
நைட் மீந்து போன இட்லி இருந்தா.. காலையில் இப்படி ஒருமுறை செஞ்சு சாப்பிடுங்க.. சூப்பரா இருக்கும்..
Masala Idli Recipe In Tamil: உங்கள் வீட்டில் நேற்று இரவு மீந்து போன இட்லி உள்ளதா? அப்படியானால் அந்த இட்லியை தூக்கிப் போடாமல் அதைக் கொண்டு சுவையான காலை உணவை செய்யுங்கள். பொதுவாக இட்லி மீந்து போனால் உப்புமா செய்வது தான் வழக்கம்.
ஆனால் இன்று மீந்து போன இட்லியைக் கொண்டு மசாலா இட்லியை செய்யுங்கள். இந்த மசாலா இட்லி மிகச்சிறந்த காலை உணவு மட்டுமின்றி, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு மசாலா இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீந்து போன இட்லியைக் கொண்டு செய்யக்கூடிய மசாலா இட்லியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன இட்லி - 6
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1/2 கப்
* குடைமிளகாய் - 1/2 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 5
* தக்காளி - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* பாவ் பாஜி மசாலா - 1/2 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் இட்லிகளை துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து வதக்கி, மேலே
உப்பு தூவி, வெங்காயம் நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 30 நொடிகள்
வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அடுத்து அதில் 2 டேபிள்
ஸ்பூன் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், மஞ்சள்
தூள், பாவ் பாஜி மசாலா சேர்த்து கிளறி, 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு இட்லி துண்டுகளை சேர்த்து, மசாலாக்கள் இட்லியுடன் நன்கு ஒன்று
சேரும் வரை கிளறி இறக்கி மேலே எலுமிசசை சாறு மற்றும் கொத்தமல்லியை
தூவினால், சுவையான மசாலா இட்லி ரெடி...
Image Courtesy: spiceupthecurry



Click it and Unblock the Notifications