Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
தேங்காய் பால் வெச்சு ரசம் செஞ்சுருக்கீங்களா? இல்லன்னா இன்னிக்கு ட்ரை பண்ணி பாருங்க.. சும்மா அள்ளும்...
Thengai Paal Rasam Recipe In Tamil: என்ன தான் ரசம் ஒரு சிம்பிளான ரெசிபியாக இருந்தாலும், அந்த ரசத்திற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏனெனில் ரசத்தில் மிளகு ரசம், பூண்டு ரசம், தக்காளி ரசம், கொள்ளு ரசம், முருங்கைக்கீரை ரசம் என்று பல உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் ஏராளமான நன்மைகளையும் கொண்டது. நீங்களும் அப்படி ஒரு ரச பிரியரா? இதுவரை நீங்கள் எத்தனையோ ரசத்தை செய்து சுவைத்திருப்பீர்கள்.
ஆனால் தேங்காய் பால் ரசத்தை சுவைத்துள்ளீர்களா? என்னது, தேங்காய் பால் ரசமா என்று கேட்கலாம். ஆம், தேங்காய் பால் கொண்டும் அற்புதமான ரசத்தை செய்யலாம் என்று செஃப் டேவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான ரசத்தை செய்து கொடுத்து அசத்த நினைத்தால், இந்த தேங்காய் பால் ரசத்தை இன்று செய்து கொடுங்கள். இந்த தேங்காய் பால் ரசத்தை வைத்து, அப்பளத்தை பொரித்து வைத்தால் போதும், அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு செஃப் டேவ் அவர்களின் தேங்காய் பால் ரசம் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த தேங்காய் பால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளங்கள்.
தேவையான பொருட்கள்:
அம்மியில் இடிப்பதற்கு...
* மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 6 பல்
பிற பொருட்கள்:
* தக்காளி - 2
* புளி - 1 எலுமிச்சை அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* தேங்காய் பால் - 2 கப்
தாளிப்பதற்கு....
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* பச்சை மிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 6 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் இடி உரலில் மிளகு, சீரகம் மற்றும் பூண்டு பற்களை
சேர்த்து நன்கு இடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் நன்கு கனிந்த 2 தக்காளி, எலுமிச்சை
அளவிலான புளி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், கொத்தமல்லி,
கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்து விட
வேண்டும்.
* நன்கு பிசைந்த பின்பு, அதில் தேங்காய் பாலை ஊற்றி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், பச்சை மிளகாய்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் இடித்து வைத்துள்ள மிளகு,
சீரகத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கரைத்து வைத்துள்ள தேங்காய் பால் கலவையை ஊற்றி
கலந்து, உப்பு சுவை பார்த்து, நுரைக்கட்டத் தொடங்கியதும், மேலே சிறிது
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான தேங்காய் பால் ரசம்
தயார்.



Click it and Unblock the Notifications
