சுகர் உள்ளவர்கள் ஈவினிங் ஸ்நாக்ஸாக இதை செய்து சாப்பிடுங்கள்.. சர்க்கரை சர்ருனு குறையுமாம்..!

Posted By:

சிறுதானியத்தில் மிக அதிகமான நார்சத்துள்ள அரிசி இந்த குதிரை வாலி அரிசிதான்.. இது நீரிழிவு நோய் தன்மையை குறைக்கும்.. இதில் மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற சாலட் செய்யலாம். குதிரை வாலி சாலட் செய்ய ரெசிபி இதோ..

தேவையான பொருள்கள்

1. குதிரை வாலி

2. தக்காளி

3. வெள்ளரிப் பிஞ்சு

4. எலுமிச்சம் பழச் சாறு

5. மிளகு

6. சீரகம்

7. பூண்டு

8. வெங்காயம்

9. குடமிளகாய்

10. சாலட் எண்ணெய்

how to make barnyard millet salad for diabetes

செய்முறை

1. 10 பல் பூண்டையும் விழுது போல அரைத்துக் கொள்ளவும்.

2. தக்காளி, குட மிளகாய், வெள்ளரி, வெங்காயம் ஆகிய இவற்றை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். (குட மிளகாயையும், வெள்ளரியையும் விதைகள் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்)

3. குதிரை வாலி அரிசியை நன்றாக ஊறவைத்து, வேக வைத்துக் கொள்ளவும்.

4. ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அனைத்துக் காய்கறிகளையும் ஒன்றாகக் கலந்து எலுமிச்சம் பழச் சாறு, மிளகு, சீரகம், பூண்டு, தேவையான அளவு உப்பு, எண்ணெய் ஆகிய இவற்றை எல்லாம் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

5. பின்னர் முன்பு நாம் வேக வைத்த குதிரை வாலி அரிசியை மேற்கண்ட காய் கறிகளுடன் நன்றாகக் கலந்து சில மணி நேரங்கள் நன்கு குளிரவிட்டுப் பரிமாறவும்.

6. இதோ இப்போது சுவையான குதிரை வாலி சாலட் தயார்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

[ of 5 - Users]
Story first published: Sunday, July 14, 2024, 17:00 [IST]
Desktop Bottom Promotion