காரசாரமான ஆந்திரா ஸ்பெஷல் சிக்கன் 65.. இதை குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க.. மிச்சம் இல்லாமல் சாப்பிடுவாங்க....!

Posted By:

சிக்கன் என்றாலே நம் வீட்டில் அனைவருக்கும் ரொம்பவே பிடிக்கும்.. அதிலும் சிக்கன் 65 என்றால் சொல்லவே வேண்டாம்.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ரெம்ப பிடிக்கும்.. அந்த வகையில் சிக்கனை வைத்து அனைவரும் ருசித்து சாப்பிடும் விதமாக ஆந்திரா ஸ்டைலில் சுவையான சிக்கன் 65 எப்படி செய்யலாம் என்று எங்கே தெரிந்து கொள்ளலாம் வாங்க..

பொதுவாகவே ஆந்திரா உணவுகள் நல்ல காரசாரமாக இருக்கும் என்பார்கள்.. அதனாலேயே அதிகமானோர் இந்த ஆந்திரா ரெசிபிகளை ட்ரை பண்ணவே மாட்டாங்க.. ஆனால் இந்த சிக்கன் 65 ரெசிபி மட்டும் சூப்பராக காரம் சற்று குறைவாக குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும்..

how-to-make-andhra-style-chicken-65

தேவையான பொருள்கள்

1. எலும்பு இல்லாத கோழிக் கறி

2. தயிர்

3. கருவேப்பிலை

4. முட்டை

5. பச்சை மிளகாய்

6. சோள மாவு

7. ஆரஞ்சு சிவப்பு கேசரி பவுடர்

8. கரம் மசாலா தூள்

9. இஞ்சி, பூண்டு விழுது

10. சீரகத் தூள்

11. மிளகாய்த் தூள்

12. மிளகுத் தூள்

13. உப்பு

14. எலுமிச்சை

15. எண்ணெய்

16. கொத்தமல்லி இலை

செய்முறை

1. முட்டையின் வெள்ளைக் கருவினை மட்டும் பிரித்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

2. மேற்கண்ட முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஆரஞ்சு கலர், இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, எலுமிச்சை சாறு, மிளகாய்த் தூள், உப்பு ஆகிய இவை அனைத்தையும் போட்டு நன்கு கலக்கி, அதில் நறுக்கின சிக்கன் துண்டுகளைப் போட்டுப் பிரட்டி ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

3. இப்போது இன்னொரு கிண்ணத்தில் தயிர், சிவப்புக் கலர், சீரகத் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும்.

4. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும் மசாலாவில் ஊற வைத்து உள்ள சிக்கன் துண்டங்களைப் போட்டு அதிகம் சிவக்க விடாமல் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

5. இப்போது பொரித்த துண்டங்களை ஒரு தட்டில் வைத்து எண்ணெய்யை நன்கு வடிய விடவும்.

6. பின்னர் ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி அதில் கருவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகிய இவற்றைப் போட்டு நன்கு வதக்கவும்.

7. இப்பொழுது மேற்கண்டவற்றுடன் கரைத்து வைத்து உள்ள தயிர் கலவையினை சேர்க்கவும்.

8. பின்னர் பொரித்து வைத்து உள்ள சிக்கன் துண்டுகளையும் சேர்த்து நன்கு வேகவிடவும்.

9. மசாலா நன்கு சுண்டி சிக்கன் துண்டங்கள் நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி தழை தூவி இறக்கி விட வேண்டும்..

10. இப்போது ஆந்திரா ஸ்டைலில் சிக்கன் 65 ரெடி

[ of 5 - Users]
Story first published: Friday, August 16, 2024, 23:40 [IST]
Desktop Bottom Promotion