Latest Updates
-
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன?
கொத்தமல்லி சட்னியை ஒருவாட்டி இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க...
Hotel Style Coriander Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி தான் செய்யப்போகிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி உள்ளதா? அப்படியானால் கொத்தமல்லி சட்னி செய்யுங்கள். அதுவும் அந்த சட்னியை வழக்கமாக நீங்கள் செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் செய்யுங்கள்.
இப்படி சட்னியை செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட 2 இட்லியை எக்ஸ்ட்ரா சாப்பிடுவார்கள். அந்த அளவில் இதன் சுவை அருமையாக இருக்கும். மேலும் இந்த சட்னி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். ஒருமுறை இந்த மாதிரி மல்லி சட்னியை செய்தால், பின் எப்போதும் இப்படி தான் செய்வீர்கள். அதுவும் இதில் மஞ்சள் தூள் சேர்ப்பதால் பச்சையும், மஞ்சளும் கலந்து, கண்ணைக் கவரும் வகையில் சட்னி இருக்கும்.

பெரும்பாலான ஹோட்டல்களில் இப்படி தான் மல்லி சட்னியை செய்வார்கள். நீங்களும் முயற்சித்து பாருங்கள். உங்களுக்கு கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பச்சை மிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 10
* இஞ்சி - 1 1/2 இன்ச்
* உப்பு - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 2 கட்டு
* புதினா - 1/2 கைப்பிடி
* புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து
பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் சேர்த்து வறுத்து, ஒரு தட்டில் அவற்றை எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கியதும், சின்ன
வெங்காயம், இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சுத்தம் செய்த 2 கட்டு கொத்தமல்லி மற்றும் 1/2 கைப்பிடி
புதினாவை சேர்த்து, சுருங்கும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த கடலை பருப்பு மற்றும் உளுத்தம்
பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து முதலில் அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அதில் வதக்கி வைத்துள்ள மீதமுள்ள பொருட்களை சேர்த்து
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொண்டு,
சிறிது நீரை ஜாரில் ஊற்றி அலசி, சட்னியுடன் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான
கொத்தமல்லி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
