Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
செஃப் தீனா ஸ்டைல் ரவா கேசரி.. இதை மறக்காம ட்ரை பண்ணி பாருங்கள்.. ருசியாக இருக்கும்..!
ரவா கேசரி என்பது தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய ஒரு இனிபப்பாகும்..வீட்டில் விஷேசம், பண்டிகை, பிறந்த நாட்கள், என எது வந்தாலும் நாம் முதலில் செய்யும் ஒரு இனிப்பு வகை ரவா கேசரிதான். கல்யாண விருந்துகளிலும் கட்டாயம் இடம் பிடித்திருக்கும் ஒரு இனிப்பு வகை இவை. வெறும் 3 அல்லது 4 பொருட்களை கொண்டே வெகு சுலபமாக இதை செய்து விடலாம். அதனாலேயே உண்பவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் மத்தியிலும் இவை ஃபேவரட் ஸ்நாக்ஸ் வகையாகும்..
என்ன தான் இவை செய்வதற்கு எளிமையாக இருந்தாலும் சில நேரங்களில் சரியான பக்குவத்தில் இவை பலருக்கும் வருவதில்லை. சிறிது பக்குவம் மாறினாலும் இவை குழைந்து விடும் அல்லது கட்டியாகி விடும். ஆனால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள செஃப் தீனாவின் எளிமையான செய்முறை விளக்கத்தை அப்படியே பின்பற்றி செய்தால் சுவையான மற்றும் இனிப்பான ரவா கேசரியை சுலபமாக உங்க வீட்டிலேயே செய்து விடலாம்..

மேலும் மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு இனிப்பான ஸ்நாக்ஸ் செய்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் செஃப் தீனா செய்த இந்த ரவா கேசரி சும்மா சுவை அள்ளும்.. கண்டிப்பாக இதை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.. இந்த ரவா கேசரியை எப்படி செய்வது? அதனை செய்ய என்னென்ன பொருட்கள் தேவை? என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
தேவையான பொருட்கள்
1 கப் ரவை ( வறுத்தது)
3 கப் தண்ணீர்
அரை கப் நெய்
கால் கப் எண்ணெய்
12 முந்திரி பருப்பு
1 ½ அரை ஸ்பூன் திராட்சை
ஒரு சிட்டிகை உப்பு
2 கப் சர்க்கரை
குங்குமப் பூ சேர்த்த தண்ணீர்
3 ஏலக்காய் இடித்தது
செய்முறை:
1. முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்ற வேண்டும். அதில் முந்திரி பருப்பு, திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
2. இதே பாத்திரத்தில் ரவையை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் தீயை மிதமான அளவில் வைத்து கொள்ளுங்கள். தொடர்ந்து மீண்டும் மிச்ச மிருக்கும் நெய்யை சேர்த்து வறுக்க வேண்டும்.
3. இப்போது ரவையின் நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும். மற்றொரு அடுப்பில் 3 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்கும் நீரை, வறுத்த கேரசி பாத்திரத்தில் ஊற்றவும். அதனை இடைவிடாமல் தொடர்ந்து கிளரவும்.
4. பின்னர் அதில் தேவையான உப்பை சேர்த்து கிளரவும். தற்போது மூடி போட்டு மூடி வைக்க வேண்டும்.. பின்னர் 5 நிமிடம் கழித்து இதில் தொடர்ந்து இதில் சர்க்கரை சேர்க்கவும். இதை நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து கொதிக்கும் நீரில் ஊறவைத்த குங்குமப்பூவை அப்படியே சேர்க்க வேண்டும்...
6. இது கேசரிக்கு நன்றாக நிறத்தை கொடுக்கும். அதனைத் தொடர்ந்து அந்த கலவையில் நெய்யை சேர்த்து கிளரி விட வேண்டும். கடைசியாக வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் இடித்ததை சேர்க்கவும். இப்போது செஃப் தீனாவின் மிருதுவான கேசரி தயார்..



Click it and Unblock the Notifications










