ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...!

Posted By:

Hotel Style Coconut Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் எந்த டிபனை செய்தாலும், அதற்கு நிச்சயம் தேங்காய் சட்னியை சைடு டிஷ்ஷாக செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் தேங்காய் சட்னியை செய்வீர்களா? தேங்காய் சட்னியை பல வழிகளில். அதுவும் ஹோட்டலில் பரிமாறப்படும் சுவையில் தேங்காய் சட்னியை செய்ய நினைத்தால், அதற்கு ஒரு சில பொருட்களை குறைத்து சில பொருட்களை சேர்த்து அரைத்தாலே போதுமானது.

முக்கியமாக இந்த ஸ்டைல் தேங்காய் சட்னி வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும், அதற்காக பச்சை மிளகாய் மற்றும் பொட்டுக்கடலையை குறைவாகவும், கூடுதலாக முந்திரி பருப்பையும் சேர்க்க வேண்டும் . சிறிய துண்டு புளியை சேர்க்க வேண்டும். இந்த ஸ்டைல் சட்னி இட்லி, தோசை, ஆப்பம், உப்புமா என அனைத்து டிபன்களுக்கும் அட்டகாசமான சைடிஷாக இருக்கும். இந்த சட்னி காரமில்லாமல் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும்படி இருக்கும்.

Hotel Style Coconut Chutney Recipe How to Make Hotel Style Coconut Chutney

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- அரை கப் துருவிய தேங்காய்
- 1 ஸ்பூன் பொட்டுக்கடலை
- 5 முந்திரிப்பருப்பு
- 2 பச்சை மிளகாய்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்

தாளிக்க:

- 1 டீஸ்பூன் எண்ணெய்
- ½ டீஸ்பூன் கடுகு
- ஒரு கொத்து கறிவேப்பிலை

செய்முறை:

- ஒரு மிக்ஸி ஜாரில் ½ கப் புதிய தேங்காய் துருவல், 1 டீஸ்பூன் பொட்டுக்கடலை, 5 முந்திரி பருப்பு, சிறிதளவு புளி, 2 பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

- முதலில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

- பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சட்னியை கொரகொரப்பாக பேஸ்டாக அரைக்கவும்.

- இந்த சட்னி கெட்டியாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். எனவே தண்ணீரை கொஞ்சமாக சேர்க்கவும். பின் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.

- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.

- எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

- கடுகு வெடித்ததும் இந்த தாளிப்பை சட்னி மீது கொட்டி நன்றாக கிளறினால் சுவையான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி ரெடி!

[ of 5 - Users]
Story first published: Thursday, March 5, 2026, 22:02 [IST]
Desktop Bottom Promotion