கொளுத்தும் வெயிலுக்கு 1/2 கப் பச்சரிசி வெச்சு இப்படி ஒரு கூலான சம்மர் ட்ரிக் செய்யுங்க.. டேஸ்டியா இருக்கும்..

Posted By:

Healthy Summer Drink Recipe In Tamil: வெயில் கொளுத்திக் கொண்டிருப்பதால் தாகம் அதிகமாக இருக்கும். மேலும் அனைவருக்கும் நன்கு குளிர்ச்சியாக ஏதாவது குடிக்க தோன்றும். இம்மாதிரியான சூழ்நிலையில் சர்பத், ஜூஸ் போன்றவற்றை குடிக்க விரும்புவோம்.

ஆனால் வீட்டில் இவை இல்லாத சமயத்தில் 1/2 கப் பச்சரிசி இருந்தால், அட்டகாசமான சுவையில் ஒரு சம்மர் ட்ரிங்க்கை செய்யலாம். இது செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி குடிக்குமாறு இருக்கும். முக்கியமாக இது இதுவரை நீங்கள் சுவைத்திராத ருசியில் இருக்கும்.

Healthy Summer Drink How To Make a Healthy Summer Drink Without Semiya Recipe

உங்களுக்கு இந்த ஆரோக்கியமான சம்மர் ட்ரிங்க்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆரோக்கியமான சம்மர் ட்ரிங்க் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி - 1/2 கப்
* பீட்ரூட் - சிறிய துண்டு
* தண்ணீர் - 250 மிலி
* உப்பு - 1 சிட்டிகை
* சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
* ஐஸ்கட்டி - சிறிது
* ஐஸ் தண்ணீர் - சிறிது
* தேங்காய் பால் - 1 1/2 கப்
* சர்க்கரை - 1/4 கப்
* பாதாம் பிசின் - 2 டேபிள் ஸ்பூன் (ஊற வைத்தது)
* சப்ஜா விதைகள் - 2 டேபிள் ஸ்பூன் (ஊற வைத்தது)

செய்முறை:

* முதலில் பச்சரிசியை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, பச்சரிசியைக் கழுவி, அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சிறிது பீட்ரூட்டை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு நாண்ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து, அதில் அரைத்த பச்சரிசி மாவை ஊற்றி, அத்துடன் 250 மிலி நீரை ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு ஒரு 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். மாவு நன்கு வெந்துவிட்டதா என்பதை கைகளில் நீரை தொட்டு பின் மாவை தொட்டுப் பார்க்கும் போது, கையில் ஒட்டாமல் இருந்தால், மாவு தயார் என்று அர்த்தம். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, ஒரளவு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளை எடுத்து, அத்துடல் ஐஸ் நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் தயாரித்த மாவை சூடாக இருக்கும் போதே, இடியாப்ப அச்சில் இந்த மாவை வைத்து, பிழிந்து கொள்ள வேண்டும்.
* மாவு அனைத்தையும் பிழிந்த பிறகு, அதை அப்படியே ப்ரீசரில் 15-20 நிமிடம் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே வேளையில் தேங்காய் பாலை எடுத்து, அதையும் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து குளிர வைத்த தேங்காய் பாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன் 1/4 கப் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் ஊற வைத்த பாதாம் பிசின் மற்றும் ஊற வைத்த சப்ஜா விதையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ப்ரீசரில் உள்ள சேமியாவை எடுத்து, அதில் உள்ள நீரை வடிகட்விட்டு, சேமியாவை மட்டும் சேர்த்து நன்கு கலந்தால், சுவையான சம்மர் ட்ரிங் தயார்.

Image Courtesy: kurinji.com

[ of 5 - Users]
Story first published: Wednesday, April 10, 2024, 15:19 [IST]
Desktop Bottom Promotion