Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
1 கப் பச்சை பயறு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி கிரேவி செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்...
Greengram Coconut Milk Gravy Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? அப்படியானால் பச்சை பயறு இருந்தால், அத்துடன் தேங்காய் பால் சேர்த்து கிரேவி செய்யுங்கள். இந்த பச்சை பயறு தேங்காய் பால் கிரேவி மிகவும் சுவையாக இருப்பதோடு, சப்பாத்தி, புலாவ், பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரி உருளைக்கிழங்கு சைடு டிஷ் செய்யாமல், அவ்வப்போது இப்படி வித்தியாசமான சைடு டிஷ் செய்யுங்கள். இதனால் சப்பாத்தி சாப்பிட போர் அடிக்காமலும் இருக்கும். முக்கியமாக இந்த கிரேவியை செய்தால், வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள். அந்த அளவில் இதன் சுவை அருமையாக இருக்கும்.

உங்களுக்கு பச்சை பயறு தேங்காய் பால் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு தேங்காய் பால் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 5-6 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பச்சை பயறு - 1 கப்
* சுடு தண்ணீர் - 2 கப்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கெட்டி தேங்காய் பால் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* தக்காளி - 1 (நறுக்கியது)
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* முந்திரி - 6
செய்முறை:
* முதலில் பச்சை பயறை நீரில் 6-7 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும். ஒருவேளை ஊற வைக்க நேரமில்லாவிட்டால், பச்சை பயறை வறுத்து,
நீரில் கழுவி குக்கரில் போட்டு, பயறு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி,
குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசில் போனதும் நீரை வடிகட்டிவிட்டு, பயறை தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை
மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து, பச்சை வாசனை போய் தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள் மற்றும் வேக வைத்துள்ள பச்சை பயறை
சேர்த்து, அத்துடன் 2 கப் சுடுநீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, 5-7
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தக்காளி, வெங்காயம், முந்திரியை சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் கொதித்துக் கொண்டிருக்கும் கிரேவியின் மூடியைத் திறந்து,
அத்துடன் குழம்பு மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
அதோடு அரைத்து வைத்துள்ள தக்காளி வெங்காய விழுதை சேர்த்து கிளறி,
மீண்டும் ஒரு 4-5 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்க
வேண்டும்.
* கிரேவி நன்கு கொதித்த பின் அதில் கெட்டி தேங்காய் பாலை சேர்த்து
கிளறி, 1-2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால்,
பச்சை பயறு தேங்காய் பால் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications











