Latest Updates
-
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம் -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க?
மாலை நேர ஸ்நாக்ஸ்: மொறுமொறுப்பான... பச்சை பட்டாணி வடை
இதுவரை நீங்கள் கடலை பருப்பு கொண்டு தான் வடை செய்திருப்பீர்கள். ஆனால் பட்டாணியைக் கொண்டு செய்யும், சுவை சற்று வித்தியாசமாக இருக்கும். முக்கியமாக இந்த வடை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
இன்று மாலை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காபி, டீ குடிக்கும் போது சூடாக ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காய்ந்த பச்சை பட்டாணி உள்ளதா? அப்படியால் அந்த பட்டாணியைக் கொண்டு அட்டகாசமான சுவையைக் கொண்ட வடை செய்து கொடுங்கள். ஆனால் அந்த பட்டாணியை குறைந்தது 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பட்டாணி வடை மிகவும் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. இதுவரை நீங்கள் கடலை பருப்பு கொண்டு தான் வடை செய்திருப்பீர்கள். ஆனால் பட்டாணியைக் கொண்டு செய்யும், சுவை சற்று வித்தியாசமாக இருக்கும். முக்கியமாக இந்த வடை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு பட்டாணி வடை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டாணி வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காய்ந்த பட்டாணி - 1 கப்
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் காய்ந்த பட்டாணியை சுடுநீரில் போட்டு மூடி வைத்து குறைந்தது 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் அந்த பட்டாணியை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து தனியாக ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை, மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை போட்டு, நன்கு மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த பொடியை அரைத்து வைத்துள்ள பட்டாணியுடன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் வெங்காயத்தை சேர்த்து, வடை பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் சிறிது சிறிதாக எடுத்து, தட்டையாக தட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பட்டாணி வடை தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications