Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க அதிர்ஷ்டத்தால் ரொம்ப சந்தோஷமா இருப்பார்களாம் -
ஜூலையில் 3 முறை உருவாகும் யுதி யோகம்: இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... -
சனி-கேது உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் வீட்டில் அடிக்கடி பல்லியை பார்ப்பது நல்லதா? கெட்டதா? சாஸ்திரம் சொல்லும் உண்மை என்ன? -
ஆறு விரல்களை கொண்டவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் தெரியுமா? -
5 தக்காளி இருந்தா இந்த செட்டிநாடு தக்காளி கொத்தமல்லி சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
தலைமுடி ஆரோக்கியமா, அடர்த்தியா வளரணுமா? அப்ப கிச்சனில் உள்ள இந்த நேச்சுரல் ஷாம்புக்களை ட்ரை பண்ணுங்க.. -
30 வயதுக்கு பின் கோடீஸ்வரராகும் யோகமுள்ள 4 நட்சத்திரங்கள் - நீங்க பிறந்த நட்சத்திரம் இதுல இருக்கா? -
தினமும் காபி, டீ-க்கு பதிலா.. ஈவ்னிங் டைம்-ல கேரட் பால் செஞ்சு குடிங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
உங்களை கொசுக்கள் அதிகம் கடிப்பதற்கு காரணம் இதுதானாம் - ஆய்வு சொல்லும் அதிர்ச்சி செய்தி - ஷாக் ஆகாதீங்க
பச்சை பயறு இட்லியும், கார மற்றும் தேங்காய் மல்லி சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Green Gram Idli With Kara Chutney And Thengai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு சத்தான டிபனை செய்து கொடுக்க வேண்டுமா? அதுவும் புரோட்டீன் நிறைந்த உணவை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் பச்சை பயறு இட்லியும், அதற்கு சைடு டிஷ்ஷாக கார சட்னி மற்றும் தேங்காய் கொத்தமல்லி சட்னியை செய்து கொடுங்கள். இந்த டிபன் ருசியானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.

உங்களுக்கு இந்த பச்சை பயறு இட்லி மற்றும் கார சட்னி, தேங்காய் கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு இட்லி மற்றும் கார சட்னி, தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு இட்லிக்கு...
* பச்சை பயறு - 1 கப்
* இட்லி அரிசி - கப்
* உளுத்தம் பருப்பு - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
கார சட்னிக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 10
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 100 கிராம்
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* புளி - 1 எலுமிச்சை அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
சட்னி தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
தேங்காய் கொத்தமல்லி சட்னிக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* பெரிய வெங்காயம் - 2
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சை பயறை எடுத்துக் கொண்டு, நீரை
ஊற்றி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மற்றொரு பாத்திரத்தில் இட்லி அரிசியை எடுத்துக் கொண்டு,
அதிலும் நீரை ஊற்றி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு உளுத்தம் பருப்பை வேறொரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு,
அதிலும் நீரை ஊற்றி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இந்த மூன்றையும் 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 5 மணிநேரம் கழித்து மூன்றையும் மிக்சர் ஜாரில் தனித்தனியாக நீரை
ஊற்றி அரைத்து, ஒரே பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கலந்து, 4 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து கார சட்னி செய்ய, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1
டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் மற்றும் காஷ்மீரி
வரமிளகாயை சேர்த்து வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் உளுத்தம் பருப்பை சேர்த்து நிறம் மாற வறுத்து,
அதையும் தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு, சின்ன வெங்காயம், புளியை சேர்த்து நன்கு வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பை
சேர்த்து முதலில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கிய மற்ற பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
அரைத்த சட்னியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கினால், சுவையான கார
சட்னி தயார்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து நிறம் மாற வதக்கி ஒரு
தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய 2 பெரிய வெங்காயம் மற்றும் புளியை சேர்த்து
நன்கு வதக்கி, அதையும் ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கொத்தமல்லியை சேர்த்து லேசாக வதக்கி அதை தனியாக எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், புளி,
பொட்டுக்கடலை, தேங்காய், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது நீரை
ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் வதக்கி வைத்துள்ள கொத்தமல்லியை சேர்த்து லேசாக
அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் நீரை ஊற்றி அலசி
சட்னியுடன் சேர்த்து கலந்து, வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் நீரை ஊற்றி
கலந்து விட வேண்டும்.
* பின்பு சட்னி தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான தேங்காய் கொத்தமல்லி
சட்னி தயார்.
* இறுதியாக இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி, அரைத்து வைத்துள்ள
மாவை கலந்து, இட்லி தட்டில் ஊற்றி, இட்லி பாத்திரத்தினுள் வைத்து 10
நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான பச்சை பயறு இட்லி தயார்.



Click it and Unblock the Notifications