Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
தமிழ் மாதங்களில் மிகவும் மங்களகரமான மாதங்களில் ஒன்றான ஆடி மாதம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த மாதமான ஆவணி மாதம் பிறக்கப்போகிறது. ஆடி மாதத்தில் திருமணம், கிரகப் பிரவேசம் மற்றும் பிற சுப காரியங்கள் எதையும் மக்கள் செய்ய மாட்டார்கள். எனவே ஆவணி மாதம் முழுவதும் பல சுப காரியங்கள் வரிசையாக நடைபெறும். இந்த மாதம் ஜோதிடரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆவணி மாதத்தில் நடக்கும் கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. ஆவணி மாதம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமானப் பலன்களை வழங்கினாலும், சில ராசிக்காரர்கள் மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை இரண்டிலும் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும். ஆவணி மாதத்தில் அவதிப்படப் போகும் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஆவணி மாதம் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. இந்த மாதத்தில் நிகழும் கிரக மாற்றங்கள் கடக ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த மாதம் நிதிப் பிரச்சினைகளை ஓரளவு சமாளிக்க முடியும். இருப்பினும், பணத்தை செலவழிப்பதில் கவனமாக இருப்பது அவசியம். மனரீதியான பிரச்சனைகள் அவற்றிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து மோசமான அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தொழிலில் சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உறவினர்களிடையே பல விஷயங்களில் அதிருப்தி ஏற்படலாம். நீங்கள் செய்ய விரும்பிய பல விஷயங்களைச் செய்ய முடியாமல் போனதால் ஏற்படும் சோகம் உங்களைத் தொடர்ந்து வேதனையடையச் செய்யலாம். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும் வாய்ப்பு அதிகம். எனவே கவனமாக செலவழிக்கவும்.
துலாம்
ஆவணி மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டத்தை அளிக்கும் மாதமாக இருக்கப்போகிறது. இந்த மாதத்தில் அவர்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படலாம், மேலும் அவர்ளின் செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரிக்கலாம். திடீரென ஏற்படும் செலவுகள் ஏற்படலாம், இது உங்கள் பட்ஜெட்டைப் பதம் பார்க்கலாம். மற்றவர்களிடமிருந்து கடன் வாங்குவதைத் தவிர்க்கவும், இல்லையெனில், நீங்கள் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.
எந்தவொரு தவறான புரிதலும் குடும்பத்திலோ அல்லது பிற உறவுகளிலோ பிரிவினையை ஏற்படுத்தக்கூடும். உங்கள் பேச்சில் கவனமாக இருங்கள், இல்லையெனில் சிறிய சண்டைகள் பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அவர்களின் திருமண வாழ்க்கையில் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, இது எதிர்காலத்தில் அவர்களுக்கு பல சிக்கல்களை உருவாக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஆவணி மாதம் மோசமான மாதமாக இருக்கப்போகிறது. இந்த மாதத்தில் உங்கள் வாழ்க்கையில் தேவையற்ற கவலைகள் ஏற்படும், பல விஷயங்களில் நீங்கள் குறுக்குவழிகளை எடுக்க வேண்டியிருக்கும். நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். எந்தவொரு விஷயத்திலும் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும், இல்லயெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
இந்த மாதத்தில் உங்கள் துணையின் உடல்நலம் குறித்த கவலைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் கருத்து வேறுபாடுகள் வாழ்க்கையில் சவால்களை உருவாக்கக்கூடும். நீங்கள் எடுக்கும் பல முடிவுகள் உங்களுக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தும். நிதி நிலைமை படிப்படியாக மோசமடையும். செவ்வாயின் இருப்பு பல நெருக்கடிகளை ஏற்படுத்தும். பெரும்பாலான விஷயங்கள் அவர்கள் விருப்பத்திற்கு எதிராகவே நடக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

