Latest Updates
-
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள்
நாகபஞ்சமி முக்கியமான இந்து பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த நாளில் மக்கள் தங்களின் கடந்த கால பாவங்களிலிருந்து விடுபடவும், வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கவும் சிவபெருமானையும், நாக தேவதைகளையும் வழிபடுகிறார்கள். இந்த வருடம் நாக பஞ்சமி நாளில் ஒரு முக்கியமான கிரக மாற்றம் நிகழ்கிறது. இது இந்த விழாவை கூடுதல் சிறப்பானதாக்குகிறது.

ஆகஸ்ட் 17 அன்று சூரியன் சிம்ம ராசிக்குள் நுழைந்து, அங்கு ஏற்கனவே அமைந்துள்ள கேதுவுடன் இணைகிறார். ஜோதிடத்தின்படி, நாக பஞ்சமி அன்று நிகழும் இந்தச் சூரிய-கேது சேர்க்கையானது சில ராசிக்காரர்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சிம்ம ராசியில் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கையானது குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்குத் தொழில், நிதி, உடல்நலம் மற்றும் உறவுகள் போன்றவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
ஜோதிடத்தின்படி, இந்த கிரகச் சேர்க்கையின் போது மிதுன ராசியினர் பணியிடத்தில் கருத்து வேறுபாடுகள், மன அழுத்தம் மற்றும் அதிகரித்த செலவுகளை சந்திக்க நேரிடலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். அவர்கள் நினைத்த விஷயங்கள் எதுவும் இப்போதும் சாதகமாக முடிவடையாது. திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அலுவலகத்தில் அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும், இல்லையெனில் அது உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டம் நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிரக சேர்க்கையால் அவர்களின் முடிவெடுக்கும் திறனிலும், தன்னம்பிக்கையிலும் பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் அவர்கள் முதலீடுகள் மற்றும் பணம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில அவமானங்களையும், வெறுமையையும் அவர்கள் சந்திக்க நேரிடும். அவர்கள் துணையுடன் சண்டைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
தொழில் வாழ்க்கையிலும் அவர்கள் மன அழுத்தத்தை உணரலாம், மேலும் அவர்களின் வணிக கூட்டாளருடன் சில வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில் மருத்துவமனைக்காக பெரிய தொகை செலவிட நேரிடலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த கிரக சேர்க்கையால் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நிதி விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் அவர்களின் தொழில் வாழ்க்கை மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள். முக்கியமாக இந்த கிரக சேர்க்கை அவர்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது. பெரும்பாலும், வணிகம் தொடர்பான விஷயங்களால் பெரிய இழப்புகள் ஏற்படும்.
வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்வார்கள், அவர்களின் மேலதிகாரிகள் அவர்கள் மீது கோபப்பட வாய்ப்புள்ளது. அவர்களின் கடின உழைப்பிற்கான பலன்களை பிறர் அடைவதற்கு வாய்ப்புள்ளது. எந்த விஷயத்திற்காகவும் பணத்தை அதிகமாக செலவழிக்காதீர்கள்.
கும்பம்
இந்த கிரக சேர்க்கையால் கும்ப ராசிக்காரர்கள் வேலையில் தாமதங்கள், தொழிலில் நிச்சயமற்ற தன்மை மற்றும் அலுவலகத்தில் வேலை தொடர்பான கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். இந்த நேரத்தில் அவர்களின் வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படலாம், மேலும் எந்த முடிவையும் தீவிரமாக ஆலோசித்தப் பிறகே எடுக்க வேண்டும்.
கும்ப ராசிக்காரர்கள் பணம் மற்றும் முதலீடுகள் தொடர்பான முடிவுகளை இந்த காலகட்டத்தில் ஒத்திவைக்க வேண்டும். குடும்பப் பிரச்சினைகள், உறவுப் பிரச்சினைகள், குழந்தைப் பிரச்சினைகள் போன்ற பல்வேறு வகையான கவலைகள் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அழுத்தத்தை அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

