ராகு-கேது தோஷம் நீங்கணுமா? அப்ப நாக பஞ்சமி அன்று உங்க ராசிக்கேற்ப இந்த பரிகாரங்களை செய்யுங்க..

Nag Panchami 2026 Remedies: ஜோதிடத்தில் ராகு-கேது ஆகியவை நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றன. இந்த கிரகங்களுக்கு மற்ற கிரகங்களைப் போல் சொந்த ராசி எதுவும் இல்லை மற்றும் இவை எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கின்றன. இந்த கிரகங்கள் ஒருவரது ஜாதத்தில் பலவீனமாக அல்லது சாதகமற்றதாக இருந்தால், அந்நபர் வாழ்வில் நிலையற்ற தன்மை, மனக்குழப்பம், வாழ்வில் தொடர்ச்சியாக தடைகளை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, தோல்விகளையும், முடிவெடுப்பதில் சிரமங்களை சந்திப்பதோடு, எதிர்மறை எண்ணங்களும் அதிகரிக்கும். இப்படி ராகு-கேதுவால் சந்திக்கும் மோசமான விளைவுகளையே ராகு-கேது தோஷம் என்பார்கள்.

Nag Panchami 2026 Rahu Ketu Remedies For 12 Zodiac Signs

ஜோதிடத்தின் படி, இந்த ராகு-கேதுவின் தோஷத்தில் இருந்து நிவாரணம் பெற வேண்டுமானால், அதற்கு ஒருசில பரிகாரங்கள் செய்ய வேண்டும். அதுவும் இந்த பரிகாரங்களை நாக பஞ்சமி நாளில் செய்யும் போது இன்னும் நல்லது. அந்த வகையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி, அதாவது இன்று நாக பஞ்சமி.

இந்நாளில் ராகு-கேதுவின் மோசமான விளைவுகளைத் தவிர்க்க 12 ராசிக்காரர்களும் தங்கள் ராசிக்கேற்ப பரிகாரங்களை செய்தால், நல்ல நிவாரணத்தைப் பெறலாம். இப்போது நாக பஞ்சமி நாளில் ராகு கேது தோஷம் நீங்க 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்னவென்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் நாக பஞ்சமி நாளில் சிவ லிங்கத்திற்கு நீரில் சிவப்பு பூக்களையும், சிவப்பு சந்தனத்தையும் கலந்து அபிஷேகம் செய்யலாம். இப்படி சிவபெருமானை வழிபடும் போது ராகு-கேதுவின் மோசமான விளைவுகளில் இருந்து விடுபடலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் நாக பஞ்சமி நாளன்று சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, வெள்ளை நிற பூக்களை படைத்து வழிபாடு செய்து, சிவ மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் நாக பஞ்சமி நாளில் சிவபெருமானை வழிபட்ட பின், விநாயகருக்கு அருகம்புல்லை சமர்ப்பித்து வழிபட வேடண்டும். அதோடு இந்நாளில் பச்சை நிற ஆடைகள், பச்சை நிற பழங்கள் மற்றும் பச்சை பயறு ஆகியவற்றை தானம் செய்வது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்கள் நாக பஞ்சமி நாளன்று ராகு-கேது தோஷம் நீங்க சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்யலாம். அதன் பின் ஒரு ஜோடி வெள்ளி பாம்பு சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் ராகு-கேது தோஷத்தால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தால், நாக பஞ்சமி நாளில் செம்பு பாத்திரத்தில் கோதுமையை தானம் கொடுங்கள். அதோடு சூரிய பகவானை வழிபாடு செய்த பின் சிவபெருமான வழிபாடு செய்யுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் ராகு-கேதுவின் தோஷத்தில் இருந்து விடுபட நாக பஞ்சமி நாளன்று விலங்குகளுக்கு, பறவைகளுக்கு உணவளித்து, சிவலிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி செய்வதனால் எதிர்மறை விளைவுகள் குறையும் என்று நம்பப்படுகிறது.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் நாக பஞ்சமி நாளன்று சிவன் கோவில்களுக்கு சென்று முடிந்த அளவு அன்னதானம் செய்வது நல்லது. இப்படி அன்னதானம் செய்யும் போது, அது ராகு-கேதுவின் தீய விளைவுகளை தணிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் நாக பஞ்சமி நாளில் சிவபெருமானை வழிபட்ட பிறகு சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்வது நல்லது. இப்படி சிவ வழிபாட்டை மேற்கொள்ளும் போது ராகு-கேதுவின் மோசமான தாக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் நாக பஞ்சமி நாளன்று சிவபெருமானை வழிபட வேண்டும். மேலும் இந்நாளில் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து, விஷ்ணு கோவிலுக்கு சென்று கொண்டைக்கடலை தானம் செய்ய வேண்டும்.

மகரம்

மகர ராசியைச் சேர்ந்தவர்கள் ராகு-கேது தோஷம் நீங்க நாக பஞ்சமி நாளன்று கருப்பு நிற நாய்க்கு பிஸ்கட் வாங்கி கொடுப்பது நல்லது. அதோடு மாலை வேளையில் அரச மரத்திற்கு கீழ் கடுகு எண்ணெய் கொண்டு தீபம் ஏற்ற வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் ராகு-கேதுவின் மோசமான விளைவுகளை தவிர்க்க நாக பஞ்சமி நாளில் ஏழை எளியோருக்கு கருப்பு நிற போர்வை, இரும்பு பொருட்கள் அல்லது எஃகு பாத்திரங்களை தானம் செய்ய வேண்டும். மேலும் சிவபெருமானுக்கு முன் அமர்ந்து மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை பாராயணம் செய்வது நல்லது.

மீனம்

மீன ராசியைச் சேர்ந்தவர்கள் நாக பஞ்சமி நாளன்று நீரில் சிறிது குங்குமப்பூவை கலந்து, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது நல்லது. அதன் பின் ஓடும் ஆற்றில் ஒரு தேங்காயை மிதக்க விடுவதும் ராகு-கேது விளைவைக் குறைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, August 17, 2026, 12:27 [IST]
Desktop Bottom Promotion