Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா?
Avani Matha Rasipalan 2026: ஜோதிடத்தின் படி கிரகங்களின் அரசனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் சிம்ம ராசிக்கு செல்லும் போது தான் தமிழ் மாதங்களில் ஆவணி மாதம் பிறக்கிறது. இந்த சிம்ம ராசியானது சூரிய பகவானின் சொந்த ராசியாகும்.

அந்த வகையில் இந்த ஆவணி மாதம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி பிறக்கிறது. இந்த ஆவணி மாதத்தில் கிரகங்களின் நிலைகளால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களும் தங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் மாற்றங்களைக் காண்பார்கள். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது 2026 ஆம் ஆண்டின் ஆவணி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஆவணி மாதமானது மிகவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக மாணவர்களுக்கு இம்மாதம் சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். இம்மாதத்தில் உங்கள் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஆவணி மாதத்தில் புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சொத்து விஷயங்களில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வருவதோடு, பரம்பரை சொத்துக்கள் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இருப்பினும், இம்மாதத்தில் தாயாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஆவணி மாதத்தில் உங்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இம்மாதத்தில் உடன் பிறந்தவர்களின் முழு ஆதவு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனைக் கண்டு பாராட்டுவதோடு, புதிய பொறுப்புக்களையும் ஒப்படைக்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! ஆவணி மாதத்தில் உங்களின் நிதி நிலைமை வலுவாகும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பண வரவு அதிகரிக்கும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். சொல்லப்போனால் பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்ப தொழிலில் நல்ல வளர்ச்சியையும், லாபத்தையும் காண்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஆவணி மாதத்தில் உங்களின் ஆளுமையும், கவர்ச்சியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழிலில் புதிய உச்சத்தை அடைவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படலாம். வணிகர்களுக்கு தங்களின் வணிகத்தை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மொத்தத்தில் தொழில் ரீதியாக ஆவணி மாதம் சிறந்ததாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஆவணி மாதத்தில் வெளிநாட்டில் பணிபுரிவதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம். செலவுகள் சற்று அதிகரிக்கும். இம்மாதத்தில் வரவு செலவுகளை கவனித்து நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. நீதிமன்ற வழக்குகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக ஆரோக்கியத்தை சற்று கவனித்து கொள்ள வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஆவணி மாதத்தில் புதிய வருமான வழிகள் உருவாகும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! ஆவணி மாதத்தில் பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அரசு வேலைகளில் இருப்பவர்களுக்கு ஆவணி மாதமானது சிறப்பானதாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஆவணி மாதமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு இம்மாதம் சாதகமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை தொடர்பாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களே! ஆவணி மாதத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். இருப்பினும் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகளை இம்மாதத்தில் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஆவணி மாதத்தில் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க வாழ்க்கைத் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ளுங்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளருடன் வெளிப்படையாக இருப்பது நல்லது. சட்ட விஷயங்களில் எந்த ஒரு நடவடிக்கையையும் நன்கு பரிசீலித்த பின் எடுக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! ஆவணி மாதத்தில் உங்களின் எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நோயால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
