Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
நாக பஞ்சமியில் நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளின் பணக்கஷ்டம் தீர்ந்து, பண வரவு அதிகரிக்கப்போகுது!
Moon Transit In Libra On Nag Panchami 2026: நாக தெய்வங்களை வழிபட உகந்த நாளான நாக பஞ்சமி இந்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. இந்த ஆண்டின் நாக பஞ்சமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இது சிவபெருமானுக்கு உரிய நாளான திங்கட்கிழமையில் வருகிறது. அதோடு இந்நாளில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் ராசியை மாற்றுகிறார்.

அதுவும் இந்நாளில் சந்திரன் கன்னி ராசியில் இருந்து வெளியேறி துலாம் ராசிக்குள் நுழைகிறார். இந்த துலாம் ராசியின் அதிபதி செல்வத்தின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் ஆவார். இந்த துலாம் ராசியில் சந்திரன் அடுத்த 2 1/2 நாட்கள் வரை இருப்பார். சந்திரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.
அதில் சிலருக்கு மோசமாக இருக்கலாம், இன்னும் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருக்கலாம். முக்கியமாக 3 ராசிக்காரர்கள் இந்த சந்திர பெயர்ச்சியால் நிதி நிலையில் முன்னேற்றத்தை காணவுள்ளனர். இப்போது நாக பஞ்சமி நாளில் நடக்கும் சந்திர பெயர்ச்சியால் நிதி நன்மைகளைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சந்திரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட காலமாக வேலையை மாற்ற நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். மேலும் புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பெற்றோருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சந்திரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் மனநிலை மேம்படும். மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். படைப்பாற்றல் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பண பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சந்திரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



