Latest Updates
-
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன?
இட்லி, தோசைக்கு இந்த இஞ்சி, பூண்டு கார சட்னியை செஞ்சு பாருங்க... எல்லாரும் 2 தோசை அதிகமா சாப்பிடுவாங்க...!
Ginger Garlic Chutney Recipe in Tamil: உணவின் சுவை அதற்கு நாம் சேர்த்து சாப்பிடும் சைடு டிஷ் பொறுத்து மாறும். பொதுவாகவே வீட்டில் நாம் தக்காளி சட்னி தேங்காய் சட்னி, ஏன் கடலை சட்னி கூட செய்வோம். சில நேரத்தில் பூண்டு சட்னி செய்வோம். ஆனால் இது போல் வித்தியாசமான சுவையில் இஞ்சி பூண்டு சட்னி செய்து பாருங்கள். வாங்க இஞ்சி பூண்டு சட்னி எப்படி செய்வதுன்னு இங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- பூண்டு - 15
- இஞ்சி - சிறிதளவு (5 இன்ச் அளவு)
- தேங்காய் - ½ மூடி
- கருவேப்பிலை - 1 கொத்து
- வரமிளகாய் - 2
- புளி - சிறிதளவு (ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு)
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
- வெந்தயம் - ¼ டீ ஸ்பூன்
- கொத்தமல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- நல்லெண்ணெய் - தாளிக்க
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கடலைப் பருப்பு - ½ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ½ டீ ஸ்பூன்
- பெருங்காயம் - ¼ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
- பூண்டை தோல் உரித்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- தேங்காயை உங்கள் விருப்பப்படி துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும்.
- புளியின் மேற்பகுதியில் இருக்கும் ஓடு மற்றும் குப்பையை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து பொரிய விடவும்.
- பின் கருவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- அதனுடன் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- பின் கொத்தமல்லி விதைகளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
- அதில் நறுக்கிய இஞ்சி மற்றும் தோல் உரித்த பூண்டு சேர்த்து கிளறவும்.
- கடைசியாக துருவிய தேங்காய் மற்றும் கழுவி வைத்த புளியை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
- நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும்.
- பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் கருவேப்பில்லை சேர்த்து பொரிய விடவும்.
- பின் கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- அதனுடன் பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைத்து சட்னி உடன் சேர்த்து கிளறினால் சுவையான இஞ்சி பூண்டு சட்னி ரெடி!
- இது சாதம் மற்றும் இட்லி, தோசைக்கு ஏற்ற சைடிஷ்ஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
