For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

5 நிமிடத்தில் பூண்டு சட்னி செய்வது எப்படி தெரியுமா?

உங்களுக்கு 5 நிமிடத்தில் பூண்டு சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

Posted By:
|

இன்று உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக ஒரு சுவையான மற்றும் காரமான சட்னி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் பூண்டு சட்னி செய்யுங்கள். இந்த பூண்டு சட்னி செய்வதற்கு 5 நிமிடம் தான் ஆகும். இந்த சட்னியை பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக இந்த சட்னி பேச்சுலர்களுக்கு ஏற்றது.

Garlic Chutney Recipe In Tamil

உங்களுக்கு 5 நிமிடத்தில் பூண்டு சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பூண்டு - 20 பல்

* காஷ்மீரி மிளகாய் - 10

* புளி - 1 டீஸ்பூன்

* வெல்லம் - 1/2 டீஸ்பூன்

* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு - 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு கப் நீரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

* பின் அதில் காஷ்மீரி மிளகாயை போட்டு, மூடி வைத்து 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின் அதில் உள்ள வரமிளகாயை எடுத்து, மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். (நீரை கீழே ஊற்றி விடாமல் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.)

* பின் ஜாரில் பூண்டு மற்றும் புளி சேர்த்து, சிறிது மிளகாய் ஊற வைத்த நீரை ஊற்றி நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த மிளகாய் பேஸ்ட் சேர்த்து, மிளகாய் ஊற வைத்த நீர் இருந்தால், அந்நீரைக் கொண்டு ஜாரைக் கழுவி வாணலியில் ஊற்றி கிளறி விட வேண்டும்.

* சட்னி கொதிக்க ஆரம்பிக்கும் போது, மூடி வைத்து 10-12 நிமிடம் சட்னியில் இருந்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* சட்னியானது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் வெல்லத்தை சேர்த்து கிளறி, 1/2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கிளறி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான பூண்டு சட்னி தயார்.

Image Courtesy: sharmispassions

[ of 5 - Users]
English summary

Garlic Chutney Recipe In Tamil

Want to know how to make a garlic chutney recipe at home? Take a look and give it a try...
Story first published: Tuesday, October 25, 2022, 18:30 [IST]
Desktop Bottom Promotion