Latest Updates
-
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
செப்டம்பர் 14, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க நிறைய சோதனைகளை சந்திக்கப் போறாங்களாம் -
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத உலகின் சந்தோஷமான நாடு - இந்த நாட்ல பிறக்க கொடுத்த வைச்சிருக்கணும்
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும்
Ganesh Chaturthi Special Masala Sundal Recipe in Tamil: விநாயகர் சதுர்த்தி வந்தாலே அனைவரின் வீட்டிலும் கொழுக்கட்டைக்கு அடுத்தபடியாக செய்யும் ஒரு பிரசாதம் என்றால் அது சுண்டல்தான். சுண்டலை பொதுவாக எப்போதும் வேகவைத்து வெங்காயம், கடலைப்பருப்பு சேர்த்து தாளிப்பார்கள். ஆனால் இந்த விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டலை செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமான சுண்டலை முயற்சி செய்து பாருங்கள்.

இந்த மசாலா சுண்டலுக்கு ஒரு தனித்துவமான மசாலாவை அரைத்து சேர்த்து தாளிக்க வேண்டும். இந்த மசாலா சுண்டலுக்கு தனித்துவமான சுவையையும், நறுமணத்தையும் கொடுக்கும். வழக்கமாக சுண்டல் செய்தால் மிஞ்சினால் இந்த மசாலா சுண்டலை செய்தால் ஒரு சுண்டல் கூட மிஞ்சாது. அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த சுண்டல் உங்கள் விநாயகர் சதுர்த்தியை கூடுதல் சிறப்பாக்கும்.
உங்களுக்கு விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் மசாலா சுண்டலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா சுண்டல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் கருப்பு சுண்டல்
- சிறிதளவு உப்பு
- கால் ஸ்பூன் பெருங்காயம்
- ¼ கப் துருவிய தேங்காய்
வறுத்து அரைக்கத் தேவையானவை:
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் மல்லி விதை
- ½ ஸ்பூன் மிளகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 2 வர மிளகாய்
- கால் ஸ்பூன் பெருங்காயம்
- 1 ஸ்பூன் எண்ணெய்
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- அரை ஸ்பூன் கடுகு
- 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- இந்த மசாலா சுண்டலை செய்ய முதல் நாள் இரவே சுண்டலை ஊற வைக்க வேண்டும்.
- சுண்டலை வேக வைப்பதற்கு முன், தண்ணீரை வடித்துவிட்டு, கொண்டைக்கடலை முழுமையாக மூழ்கும் அளவிற்கு மட்டும் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் போடவும்.
- பிறகு, உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து, மிதமான தீயில் 4 அல்லது 5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- சுண்டல் வெந்து கொண்டிருக்கும் சமயத்தில், ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடலைப்பருப்பு, மல்லி, மிளகு ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். அதன்பின் சீரகம் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- கடலைப்பருப்பு பொன்னிறமாகி மணம் வரும் வரை வறுக்கவும். பிறகு ஆறவைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி கடுகு சேர்த்துத் தாளிக்கவும். அதன்பின் உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- அதன்பிறகு தண்ணீரை வடித்துவிட்டு வேகவைத்த கொண்டைக்கடலையைச் சேர்க்கவும்.
- இறுதியாக அரைத்த மசாலா மற்றும் துருவிய தேங்காயைச் சேர்த்து கிளறி மிதமான தீயில் 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- மசாலா சுண்டலில் நன்கு சேர்ந்ததும் அடுப்பை அணைத்தால் கமகமக்கும் மசாலா சுண்டல் ரெடி!



Click it and Unblock the Notifications
