விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலா பஞ்சு போல எள்ளு பூர்ண கொழுக்கட்டையை எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Ganesh Chaturthi Special Ellu Pooranam Kozhukattai: விநாயகர் சதுர்த்திக்கு ஸ்பெஷலாக ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு படைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் எள்ளு பூர்ண கொழுக்கட்டையை செய்யுங்கள்.

இந்த கொழுக்கட்டை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். நீங்கள் என்ன தான் பூர்ண கொழுக்கட்டை செய்தாலும், அந்த கொழுக்கட்டை கல் போன்று இருக்குமா? அப்படியானால் ஒருமுறை இந்த எள்ளு பூர்ண கொழுக்கட்டையை செய்யுங்கள்.

Ganesh Chaturthi Special Ellu Pooranam Kozhukattai How To Make a Sesame Pooranam Kozhukattai Recipe

உங்களுக்கு எள்ளு பூர்ண கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எள்ளு பூர்ண கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மாவு பச்சரிசி - 150 கிராம் / 1 டம்ளர்
* தண்ணீர் - 2 டம்ளர்
* உப்பு - சிறிது
* நெய் - 1 டீஸ்பூன்

பூரணம் செய்வதற்கு...

* வெல்லம் - 1 டம்ளர்
* தண்ணீர் - 1/4 டம்ளர்
* வறுத்த வேர்க்கடலை - 3/4 டம்ளர்
* எள்ளு - 3/4 டம்ளர்
* ஏலக்காய் - 3
* நெய் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 3/4 டம்ளர்

செய்முறை:

* முதலில் பச்சரிசியை நீரில் 2-3 முறை கழுவி, பின் நீரை ஊற்றி 2 மணிநேரம் ஊறு வைக்க வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, அரிசியில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, அரிசியை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் 1/2 டம்ளர் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த மாவில் இன்னும் 1 1/2 டம்ளர் நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்த மாவை ஊற்றி, அத்துடன் உப்பு மற்றும் நெய் சேர்த்து, குறைவான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
* மாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வரை நன்கு அழுத்தி விட்டு கிளறி வேக வைத்து இறக்கி, அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூடி வைத்து, கை பொறுக்கும் சூட்டிற்கு வரும் வரை ஆற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு, அத்துடன் 1/4 டம்ளர் நுரை ஊற்றி, வெல்லத்தை கரையவிட வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகளை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை, எள்ளு விதைகள் ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து இறக்கி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், துருவிய தேங்காயை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் காய்ச்சி வைத்துள்ள வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி, பொடித்து வைத்துள்ள எள்ளு பொடியை சேர்த்து கிளறி, 3 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து கையில் எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பிறகு சிறிது மாவை எடுத்து உருட்டி தட்டையாக தட்டி, நடுவே எள்ளு பூர்ணத்தை வைத்து மடித்து மூடி, இட்லி தட்டில் வைத்து 10-15 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான எள்ளு பூர்ண கொழுக்கட்டை தயார்.

Image Courtesy: spicy Samayal

[ of 5 - Users]
Story first published: Thursday, September 5, 2024, 17:35 [IST]
Desktop Bottom Promotion