Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
சன்டே ஸ்பெஷல்: நாவூறும்... ருசியான... ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் ப்ரை
Erode Pallipalayam Chicken Fry: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த வாரம் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஸ்பெஷலான சிக்கன் ரெசிபியை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் ப்ரை செய்து கொடுங்கள்.
இந்த ஈரோடு ஸ்பெஷல் ரெசிபி சாதம் அல்லது ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் ப்ரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 500 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 12
* கறிவேப்பிலை - சிறிது
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு...
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பூண்டு - 12 பற்கள்
* கறிவேப்பிலை - ஒரு கையளவு
* பச்சை மிளகாய் - 3
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், பூண்டு,
கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 3 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு மூடி வைத்து, சிக்கனை 25-30 நிமிடம் குறைவான தீயில் வைத்து
வேக வைக்க வேண்டும். முக்கியமாக அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது
கிளறி விட வேண்டும்.
* சிக்கன் வெந்ததும், மூடியைத் திறந்து, தீயை அதிகரித்து சிக்கனை
பொன்னிறமாக ரோஸ்ட் செய்து இறக்கினால், சுவையான ஈரோடு பள்ளிபாளையம்
சிக்கன் ப்ரை தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











