இப்படி முட்டை தோசை செஞ்சா... சைடு டிஷ் செய்யவே தேவையில்ல.. ட்ரை பண்ணி பாருங்க...

வீட்டில் தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் அதற்கு சைடு டிஷ் எதுவும் செய்து சாப்பிட பிடிக்கவில்லையா? அப்படியானால் உங்கள் வீட்டில் முட்டை உள்ளதா? அந்த முட்டைக் கொண்டு சுவையான முறையில் முட்டை தோசை செய்து சாப்பிடுங்கள்.

Posted By:

வீட்டில் தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் அதற்கு சைடு டிஷ் எதுவும் செய்து சாப்பிட பிடிக்கவில்லையா? அப்படியானால் உங்கள் வீட்டில் முட்டை உள்ளதா? அந்த முட்டைகளைக் கொண்டு சுவையான முறையில் முட்டை தோசை செய்து சாப்பிடுங்கள். இந்த முட்டை தோசையை இரண்டு வெரைட்களில் செய்யலாம். இரண்டிற்குமே எந்த ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

Egg Dosa Recipe In Tamil

உங்களுக்கு முட்டை தோசையின் இரண்டு வெரைட்டிகளை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை தோசையின் இரண்டு வெரைட்டிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு பிடித்தவாறு செய்து சாப்பிட்டு எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வெரைட்டி - 1

* தோசை மாவு

* முட்டை - 4

* வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 2

* தக்காளி - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

* உப்பு - சுவைக்கேற்ப

* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப

* எண்ணெய் - தேவையான அளவு

வெரைட்டி - 2

* தோசை மாவு - 2 கப்

* முட்டை - 3

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* உப்பு - சுவைக்கேற்ப

* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப

* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வெரைட்டி- 1

* முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் உப்பு, மிளகுத் தூள், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் தோசை மாவைக் கொண்டு தோசை ஊற்றி, அதன் மேல் இந்த முட்டை கலவையை ஊற்றி பரப்பி, எண்ணெய் ஊற்றி, முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்தால், முட்டை தோசை தயார்.

வெரைட்டி - 2

* முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், ஒரு கரண்டி தோசை மாவைக் கொண்டு தோசையை ஊற்றி, அதன் மேல் கலந்து வைத்துள்ள முட்டையை பாதி ஊற்றி பரப்பி, மேலே சிறிது உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான முட்டை தோசை தயார்.

Image Courtesy: yummytummyaarthi

[ of 5 - Users]
Story first published: Wednesday, February 1, 2023, 19:55 [IST]
Desktop Bottom Promotion