சப்பாத்தி, தோசைக்கு சிறந்த சைடிஷான முட்டை பட்டர் மசாலா ரெசிபி... இத செஞ்சு பாருங்க... எல்லோரும் அசந்துருவாங்க!

Posted By:

Egg Butter Masala Recipe: இந்திய வீடுகளில் இட்லி, தோசைக்குப் பிறகு அதிகமாக செய்யப்படும் இரவு உணவென்றால் அது சப்பாத்திதான். சப்பாத்தி சாப்பிட்டால் எடை குறையும் என்ற நம்பிக்கை நிலவுவதும் இதற்கு முக்கிய காரணமாகும். சப்பாத்திக்கு பொதுவா சிறந்த சைடிஸ் என்றால் அது உருளைக்கிழங்கு குருமாதான். சில சிறப்பு சந்தர்ப்பங்களில் சிக்கன் அல்லது மட்டன் குருமா செய்யப்படும்.

சப்பாத்தி மற்றும் பனீர் பட்டர் மசாலா என்பது மிகவும் பிரபலமான காம்போவாகும். ஆனால் முட்டை பட்டர் மசாலாவை நீங்கள் இதற்கு முன்னால் முயற்சித்து உள்ளீர்களா? வேகவைத்த முட்டைகளை வைத்து செய்யப்படும் இந்த சுவையான மற்றும் எளிதான முட்டை பட்டர் மசாலா சப்பாத்தி, பூரி மற்றும் தோசைக்கு சிறந்து சைடிஷாக இருக்கும். இந்த பதிவில் முட்டை பட்டர் மசாலா எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Egg Butter Masala Recipe How to Prepare Egg Butter Masala at Home

தேவையான பொருட்கள்:

- வேகவைத்த முட்டை - 5
- வெங்காயம் - 2
- தக்காளி - 3
- இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- முந்திரி பருப்பு - 10
- மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
- வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- பட்டை, ஏலக்காய், கிராம்பு - தாளிக்க
- உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

- தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி விட்டு கத்தியால் கீறி வைக்கவும்.
-வாணலியில் வெண்ணெய்விட்டு அத உருகியதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அடுத்து முந்திரி பருப்பு சேர்க்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து குழைய வேக வைக்கவும்.
-அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிவிட்டு இறக்கி ஆறவைக்கவும்.
- பின்னர் இந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- மீண்டும் மற்றொரு வாணலியில், வெண்ணெய் சேர்த்து உருகியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பிறகு, அரைத்து வைத்த விழுது, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கூடவே, முட்டையை நான்கு பக்கத்தில் கீறிவிட்டு கலவையுடன் சேர்த்து கிளறி சுமார் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- இந்த கலவை கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும்.
- பொடியாக நொறுக்கிய கொத்தமல்லி அல்லது கஸ்தூரி மேத்தி போட்டு இறக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான முட்டை பட்டர் மசாலா ரெடி!

[ of 5 - Users]
Story first published: Sunday, November 10, 2024, 19:30 [IST]
Desktop Bottom Promotion