Latest Updates
-
முழுமுதற் கடவுளான விநாயகருக்கு எலி எப்படி வாகனமாக மாறியது தெரியுமா? -
Diwali 2026: இந்த தீபாவளிக்கு லட்சுமி தேவியின் ஆசியை பெற உதவும் எளிய வாஸ்து டிப்ஸ்கள் - மறக்காம செய்யுங்க -
Vastu Tips: வாஸ்துப்படி கடிகாரத்தை வீட்டின் எந்த திசையில் தொங்கவிட வேண்டும் தெரியுமா? -
தஞ்சாவூர் தவலை அடை ரெசிபி - இந்த மாதிரி டிபன் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஆசையா நிறைய சாப்பிடுவாங்க -
Hair Care: கருகருவென நீளமான முடி வேணுமா? அப்ப முட்டையை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
வெயிலால் கருமையான முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப செம்பருத்தி பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
வர நவம்பர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் தெரியுமா? அடேங்கப்பா இவ்வளவா? -
மணமணக்கும்.. செட்டிநாடு வெங்காய ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசி அள்ளும்.. -
1 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் சாம்பார் வைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
தீபாவளிக்கு 1 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இந்த ரிப்பன் பக்கோடா செய்யுங்க.. 10 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்..
Diwali Special Pasiparuppu Ribbon Pakoda Recipe In Tamil: தீபாவளியை முன்னிட்டு உங்கள் வீட்டில் பலவிதமான பலகாரங்களை செய்யும் வழக்கம் உள்ளதா? எப்போதும் தீபாவளி வந்தால் முறுக்கு மட்டும் தான் செய்வீர்களா? அப்படியானால் இந்த ஆண்டு தீபாவளிக்கு பாசிப்பருப்பு இருந்தால், அதைக் கொண்டு மொறுமொறுப்பான பாசிப்பருப்பு ரிப்பன் பக்கோடாவை செய்யுங்கள். இந்த பக்கோடாவிற்கு கஷ்டப்பட்டு மாவு அரைக்க தேவையில்லை. பாசிப்பருப்பும், அரிசி மாவும் இருந்தால் போதும், மொறுமொறுவென்று சூப்பரான ரிப்பன் பக்கோடாவை செய்யலாம்.

உங்களுக்கு இந்த பாசிப்பருப்பு ரிப்பன் பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு ரிப்பன் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்ற எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 3 கப்
* பச்சரிசி மாவு - 4 கப்
* வெள்ளை எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* வேக வைத்த பாசிப்பருப்பு
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் குக்கரில் பாசிப்பருப்பை எடுத்துக் கொண்டு, நீரில் 2
முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 3 கப் நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பாசிப்பருப்பை நன்கு
கட்டிகளின்றி மசித்து விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 4 கப் பச்சரிசி மாவை எடுத்துக் கொண்டு,
அதில் வெள்ளை எள்ளு, சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள் மற்றும்
பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கைகளால் கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து,
முதலில் கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின் அதில் லேசாக நீரை தெளித்து விட்டு, முறுக்கு மாவு பதத்திற்கு
சற்று மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு முறுக்கு உழக்கை எடுத்துக் கொண்டு, அதில் ரிப்பன் பக்கோடா
அச்சை வைத்து, அதனுள் பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது வைத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், நேரடியாக எண்ணெயில் அந்த பக்கோடாவை
பிழிந்துவிட்டு நன்கு பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான
பாசிப்பருப்பு ரிப்பன் பக்கோடா தயார்.



Click it and Unblock the Notifications
