Latest Updates
-
மீந்து போன சப்பாத்தியை வைச்சு இந்த மாதிரி உப்பு செய்யுங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
Hair Care: தலைக்கு எண்ணெய் வைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க - இல்லனா முடி வீணாகிரும் -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கிறதா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
நியூமராலஜி படி இந்த தேதியில் பிறந்தவர்கள் கேதுவின் ஆசியால் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க பிறந்த தேதி என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நவம்பர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சாறு பிழிந்த எலுமிச்சை தோலை வீணாக்காதீங்க - இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க - ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பருப்பை கடையாம, ஒருவாட்டி ஹோட்டல் ஸ்டைல் பருப்பு கடையல் செய்யுங்க.. -
டாக்டர்கள் ஆப்ரேஷன் செய்யும் போது ஏன் நீலம் அல்லது பச்சை நிற உடை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
தொடர்ந்து 30 நாட்கள் தினமும் பூசணி விதைகளை சாப்பிட்டால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா? -
செட்டிநாடு முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - எடை புயல் வேகத்துல குறையும்
தீபாவளிக்கு கஷ்டப்பட்டு மாவு அரைக்காம இப்படி பட்டர் முறுக்கு செய்யுங்க.. 1 மாசம் வரை வெச்சு சாப்பிடலாம்!
Diwali Special Butter Murukku Recipe In Tamil: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உங்கள் வீட்டில் எப்போதும் முறுக்கு சுடும் வழக்கம் உள்ளதா? அதுவும் எப்போதும் கை வலிக்க மாவு அரைத்து தான் முறுக்கு சுடுவீர்களா? அப்படியானால் இந்த ஆண்டு தீபாவளிக்கு அவ்வளவு கஷ்டப்பட்டு முறுக்கு சுடாமல், அரிசி மாவு, கடலை மாவு கொண்டே மொறுமொறுப்பான மற்றும் சுவையான பட்டர் முறுக்கு செய்யுங்கள். இந்த பட்டர் முறுக்கு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். முக்கியமாக வழக்கமாக செய்யும் முறுக்கை விட இந்த முறுக்கு மென்மையாக இருக்கும்.

உங்களுக்கு பட்டர் முறுக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டர் முறுக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு - 2 கப்
* கடலை மாவு - 1/2 கப்
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* எள்ளு விதை - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1 3/4 டீஸ்பூன்
* வெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரிசி மாவை
சேர்த்து நன்கு வறுத்து இறக்கி, ஒரு சல்லடையில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் கடலை மாவை
சேர்த்து லேசாக வறுத்து, அதையும் சல்லடையில் உள்ள அரிசி மாவுடன்
சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதே வாணலியில் பொட்டுக்கடலையை சேர்த்து மொறுமொறுவென்று
மாறும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு
மென்மையாக அரைத்து பொடி செய்து, சல்லடையில் உள்ள மாவுடன் சேர்த்து,
அனைத்து மாவையும் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு சலித்த மாவை கைகளால் நன்கு கிளறி விட்டு, பின் அதில்
சீரகத்தை கைகளால் நன்கு நசுக்கி சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் எள்ளு விதை, பெருங்காயத் தூள், மிளகாய் தூள், உப்பு
மற்றும் வெண்ணெய் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு
பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து முறுக்கு உழக்கை எடுத்துக் கொண்டு, அதில் ஸ்டார் அச்சை
வைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை உழக்கில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உழக்கில் உள்ள மாவை எண்ணெயில் நேரடியாக
பிழிந்துவிட்டு, எண்ணெய் சலசலப்பு அடங்கியதும், திருப்பிப் போட்டு
பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான பட்டர் முறுக்கு தயார்.



Click it and Unblock the Notifications
