Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
மாவு எதுவும் அரைக்காம 10 நிமிடத்தில் தீபாவளிக்கு சூப்பர் பலகாரம் செய்யணுமா? அப்ப இத பண்ணுங்க..
Diwali Special Ribbon Pakoda Recipe In Tamil: தீபாவளிக்கு உங்கள் வீட்டில் பலவிதமான பலகாரங்களை செய்யும் வழக்கம் உள்ளதா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் கார பலகாரங்களை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்களா? இதனால் முறுக்கு, சீவல், ரிப்பன் பக்கோடா என்று பலவற்றை செய்வீர்களா?
பொதுவாக இப்படியான பலகாரங்களுக்கு மாவை அரைத்து தான் நிறைய பேர் செய்வார்கள். ஆனால் மாவு எதுவும் அரைக்காமல் 10 நிமிடத்தில் அற்புதமான சுவையில் ரிப்பன் பக்கோடாவை செய்யலாம் என்பது தெரியுமா? இதை தெரிந்து வைத்துக் கொண்டால், தீபாவளிக்கு சிரமப்படாமல் பலகாரத்தை செய்யலாம்.

உங்களுக்கு ரிப்பன் பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரிப்பன் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு - 300 கிராம்
* பொட்டுக்கடலை - 100 கிராம்
* பூண்டு - 3 பல்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* எள்ளு - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சூடான எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரிசி மாவை
சேர்த்து, மிதமான தீயில் வைத்து 10-12 நிமிடம் வறுத்து இறக்கி குளிர
வைத்து, சல்லடையில் சலித்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலையை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்து, அதையும் அரிசி மாவில் சல்லடையில் சலித்து சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் பூண்டு பற்கள், மிளகாய் தூள் சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை மாவில் வடிகட்டி பயன்படுத்தி வடிகட்டிக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் எள்ளு விதைகள், உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து
ஒருமுறை கைகளால் கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் சூடான எண்ணெயை ஊற்றி கரண்டியால் சிறிது நேரம் கிளறி
விட வேண்டும்.
* எண்ணெயின் சூடு குறைந்ததும், கைகளால் நன்கு பிசைந்து கிளற
வேண்டும்.
* அடுத்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு
பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். முக்கியமாக மாவு
மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், முறுக்கு உழக்கை எடுத்து, அதில் ரிப்பன் பக்கோடா
அச்சை வைத்து, பிசைந்த மாவை வைத்து, எண்ணெயில் நேரடியாக பிழிந்து விட
வேண்டும். மிதமான தீயில் வைத்து, ரிப்பன் பக்கோடாவை முன்னும் பின்னும்
திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால், ரிப்பன் பக்கோடா தயார்.



Click it and Unblock the Notifications