Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம்
ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட ஆளுமையும், இயல்பும் உண்டு. சிலர் அளவில்லாத தைரியம் கொண்டவர்களாகவும், எதையும் செய்வதற்குத் துணிந்தவர்களாகவும் இருப்பார்கள். அதே சமயம் சிலர் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட பயப்படும் இயல்புடையவர்களாக இருப்பார்கள், எளிதில் பதட்டமடைவார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் பிறந்த ராசி அவர்கள் எவ்வளவு தைரியசாலிகளாக இருப்பார்கள் என்பதை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதன்படி குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் அசாத்திய துணிச்சல் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் உள்ள தன்னம்பிக்கையும், துணிச்சலும் எப்படிப்பட்ட செயலையும் தங்களால் செய்ய முடியுமென்ற எண்ணத்தை அவர்களுக்குள் உருவாக்கும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் அசாத்திய தைரியம் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். தைரியம் மற்றும் வீரத்தின் கிரகமான செவ்வாய் கிரகத்தின் தாக்கம் அவர்களிடம் தீவிரமாக வெளிப்படும். எனவே, இவர்களிடமும் அந்தப் பண்புகள் காணப்படுகின்றன. மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் கூட அவர்கள் பதற்றமடையாமல், துணிச்சலுடன் முன்னேறிச் செல்கிறார்கள். அவர்கள் தைரியசாலிகளாக இருப்பதுடன் மற்றவர்களின் மனதிலிருந்து பயத்தைப் போக்கும் ஆற்றலும் இவர்களிடம் உள்ளது. செவ்வாய் மட்டுமின்றி இந்த ராசிக்கு அனுமன் பெருமானின் சிறப்பான அருளாசியும் உண்டு. எனவே, இவர்கள் முன்னேறிச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.
சிம்மம்
கிரகங்களின் ராஜாவான சூரியனின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே அச்சமற்றவர்களாகத் திகழ்கிறார்கள். கடினமான சூழ்நிலைகளைக்கூடத் தங்கள் சொந்த முயற்சியால் சரிசெய்யும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களை விட அதிகமாக சாகசச் செயல்களில் ஈடுபடுவதை நாம் பார்க்கலாம். சிம்ம ராசியில் பிறந்தவர்களிடம் தலைமைத்துவப் பண்புகளும் காணப்படுகின்றன. எனவே இந்த ராசியில் பிறந்தவர்கள் தலைமை பொறுப்புகளில் அச்சமின்றி செயல்படுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் வெளித்தோற்றத்திற்கு அமைதியாக இருப்பதாகத் தோன்றினாலும், அவர்களிடம் துணிச்சலுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை. தங்கள் பணிகளை வெற்றிகரமாக முடிக்க, அவர்கள் எத்தகைய கடினமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருப்பார்கள். அவர்களிடம் துணிச்சலும் அச்சமின்மையும் வெளிப்படையாகவே காணப்படும். செவ்வாய் கிரகம் விருச்சிக ராசியின் அதிபதியாகத் திகழ்கிறது. இதனால், இந்த ராசியினர் அனைத்து சவாள்களையும் முறியடித்துத் தங்கள் இலக்குகளை அடைகின்றனர். அவர்கள் மிகுந்த துணிச்சல் மிக்கவர்கள். தங்கள் கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தால், அவர்கள் அனைத்துத் துறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டுகின்றனர். இவர்கள் மற்றவர்களைச் சார்ந்திருக்காமல், ஒவ்வொரு வேலையையும் தாங்களே செய்து முடிக்க முடிப்பார்கள்.
தனுசு
குருபகவானால் ஆளப்படும் தனுசு ராசிக்காரர்கள் அச்சமற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் சவாலான அல்லது ஆபத்தான பணிகளைச் செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள். அத்தகைய பணிகளை செய்ய எப்போதும் தயாராக இருப்பார்கள். இருப்பினும், வாழ்க்கையில் எந்தவொரு ஆபத்தான முடிவையும் எடுப்பதற்கு முன் அவர்கள் நன்கு சிந்தித்துச் செயல்படுவார்கள். மற்றவர்கள் செய்வதற்குச் சிரமப்படும் அல்லது சவாலாகக் கருதும் பணிகளை இவர்கள் எளிதில் செய்து முடிப்பார்கள். அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும் குருபகவான் இவர்களின் அதிபதியாக இருப்பதால் இவர்களிடம் சிறந்த தலைமைத்துவப் பண்புகளும் காணப்படுகின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

