Latest Updates
-
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா?
பால் பவுடர் பர்ஃபி - தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி
பெரும்பாலும் கடைகளில் தான் பால் பவுடர் பர்ஃபியை வாங்கி சுவைத்திருப்பீர்கள். ஆனால் இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.
உங்களுக்கு அவ்வளவாக இனிப்பு பலகாரங்கள் செய்ய வராதா? எது செய்தாலும் ஏதாவது சொதப்பல் நடந்துவிடுமா? இந்த காரணத்தினாலேயே பண்டிகைக் காலங்களில் வீட்டில் பலகாரங்களை செய்வதில்லையா? அப்படியானால் அத்தகையவர்களுக்கான ஒரு ஈஸியான ஸ்வீட் ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அது தான் பால் பவுடர் பர்ஃபி. இந்த ரெசிபி செய்வதற்கு வெறும் 4 பொருள் இருந்தால் போதும், எளிதில் செய்துவிடலாம்.

குறிப்பாக பண்டிகைக் காலங்களில் செய்வதற்கு ஏற்ற பலகாரமும் கூட. பெரும்பாலும் கடைகளில் தான் இந்த பர்ஃபியை வாங்கி சுவைத்திருப்பீர்கள். ஆனால் இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். சரி, இப்போது பால் பவுடர் பர்ஃபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: தீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு உக்கரை
தேவையான பொருட்கள்:
* பால் பவுடர் - 1 கப்
* பால் - 1/4 கப்
* பொடி செய்யப்பட்ட சர்க்கரை - 1/3 கப்
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* நட்ஸ் - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
* குங்குமப்பூ - 4 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு நான்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும், பாலை ஊற்ற வேண்டும்.
* பின் மெதுவாக பால் பவுடரையும் சேர்த்து கெட்டி சேராதவாறு நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு பொடி செய்யப்பட்ட சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். கலவையானது கெட்டியாக ஆரம்பித்து, வாணலியில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும். அப்படி நன்கு கெட்டியாகி வரும் போது, சிறிது கலவையை எடுத்து உருட்டி பார்க்கவும். அவ்வாறு உருட்டும் போது, எளிதில் பந்து போலானால், சரியான பதத்தில் உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பின் ஒரு அகலமான தட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி, அதில் இந்த கலவையை ஊற்றி பரப்பி விட்டு, அதன் மேல் குங்குமப்பூ மற்றும் நறுக்கிய நட்ஸ்களை தூவி, ஒரு நெய் தடவிய ஸ்பூன் கொண்ட லேசாக அழுத்தி விட்டு, 10-15 நிமிடம் அறை வெப்பநிலையில் அப்படியே வைக்க வேண்டும்.
* இறுதியில் ஒரு கத்தியால் அதை சதுர துண்டுகளாக வெட்டினால், சுவையான பால் பவுடர் பர்ஃபி தயார்!



Click it and Unblock the Notifications
