Latest Updates
-
2 கப் ஜவ்வரிசி இருந்தா.. தீபாவளிக்கு 10 நிமிஷத்துல ஸ்வீட், கார மிக்சர் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க.. -
தீபாவளி பட்டாசு புகையால் கண் எரிச்சல், சரும அலர்ஜி, மூச்சுத்திணறலா? பாதுகாப்பாக இருக்க டாக்டர் கூறும் டிப்ஸ்! -
18 ஆண்டுகள் கழித்து மகரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. உங்க ராசி என்ன? -
செக் எழுதும்போது ஏன் தொகைக்கு பக்கத்தில் 'ONLY' என்று எழுதுகிறோம் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
ராகி ரவா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 05, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வெற்றிகளை குவிக்கப் போறாங்களாம் -
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க..
3/4 கப் உளுந்து இருந்தா இந்ததால் மகாராணியை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும்
Dal Maharani Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி, பூரி செய்வீர்களா? அவற்றிற்கு உருளைக்கிழங்கு குருமாவைத்தான் எப்போதும் சைடிஷாக செய்வீர்களா? ஒரே மாதிரியான சைடிஷ் செய்து சப்பாத்தியும், தோசையும் சாப்பிட போரடிக்கிதா? அப்படியானால் ஒருமுறை இந்த வித்தியாசமான நார்த் இந்தியன் ஸ்டைல் தால் மகாராணியை செஞ்சு பாருங்க.

இந்த தால் மகாராணி என்பது நார்த் இந்தியாவில் மிகவும் பிரபலமானதாகும். நம்மூரிலும் தாபாக்களில் பெரும்பாலான மக்கள் சப்பாத்தி, புரோட்டா, நாண் என அனைத்து வகை டிபன்களுக்கும் இதை ஆர்டர் செய்கிறார்கள். இந்த தாபா ஸ்டைல் தால் மகாராணி சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட. வழக்கமான சைடிஷ் சாப்பிட்டு போரடித்தவர்கள் இந்த சைடிஷை ஒரு தடவை முயற்சி செய்து பார்க்க வேண்டும்.
உங்களுக்கு தாபா ஸ்டைல் தால் மகாராணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாபா ஸ்டைல் தால் மகாராணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பருப்பை வேகவைக்க:
- உளுத்தம் பருப்பு - ¾ கப்
- ராஜ்மா - ¼ கப்
- கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி - 1 இன்ச் துண்டு
- பூண்டு - 5 பல்
- மிளகாய்த்தூள் - ½ டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- வெண்ணெய் - 1 டீ ஸ்பூன்
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
- பிரியாணி இலை - 1
- கிராம்பு - ½ டீ ஸ்பூன்
- பட்டை - 1 இன்ச் துண்டு
- ஜாதிபத்திரி - ½ துண்டு
- வெங்காயம் - 1
- இஞ்சி - 1 இன்ச் துண்டு
- பூண்டு - 12 பல்
- பச்சை மிளகாய் - 2
- மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- சீரகத்தூள் - ½ டீ ஸ்பூன்
- கொத்தமல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- தக்காளி - 2
- உப்பு - தேவையான அளவு
- கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
- கசூரி மேத்தி - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கருமை நிற பூஞ்சை இல்லாமல் நன்கு கழுவி கொள்ளவும். பின் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும். 5 பல் பூண்டை இடித்து வைக்கவும். மீதமுள்ள பூண்டு பற்களை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- நன்கு பழுத்த தக்காளியை கழுவி விட்டு பச்சை நிற காம்பு பகுதியை நீக்கவும். பின் கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி, பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பச்சை மிளகாயை கழுவி காம்புகளை நீக்கி வைக்கவும். கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை மண் இல்லாமல் சுத்தமாக அலசி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் ராஜ்மாவை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு அலசி, குறைந்தது 5 மணி நேரம் அல்லது முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.
- ஊறவைத்த பருப்பு மற்றும் ராஜ்மாவை பிரஷர் குக்கரில் சேர்க்கவும். அதனுடன் கடலைப் பருப்பு, நறுக்கிய இஞ்சியில் பாதி அளவு மற்றும் இடித்து வைத்த பூண்டை சேர்க்கவும்.
- பின்னர் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும். அதனுடன் 3 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 6 விசில் வரும் வரை வேகவிடவும். பருப்பு முழுமையாக குழையாமல் சுமார் 90% வேகும் வரை சமைக்கவும். குழம்பு கொதிக்கும் போது முழுவதும் வெந்துவிடும்.
- பெரிய பாத்திரம் அல்லது அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்க்கவும். அதில் சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொரிய விட்டு, பின் பிரியாணி இலை, கிராம்பு, பட்டை மற்றும் ஜாதிபத்திரி சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுக்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், மீதமுள்ள நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், கொத்தமல்லித்தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து, மசாலாப் பொருட்களின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- இப்போது பொடியாக நறுக்கி வைத்த தக்காளியைச் சேர்த்து, அவை நன்கு குழைந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். அதனுடன் வேக வைத்த பருப்பு மற்றும் ராஜ்மாவை சேர்த்து மெதுவாக கிளறவும்.
- தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி மிதமான தீயில் 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பருப்பு முழுமையாக வெந்து, மசாலாவுடன் நன்கு கலக்கும் வரை வேக வைக்கவும். தேவைப்பட்டால் பருப்பை நன்கு மசித்து விடவும்.
- கடைசியாக கிரீம் மற்றும் கசூரி மேத்தியை நன்கு நசுக்கி சேர்த்து கிளறி, அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான தால் மகாராணி ரெடி!
- இந்த தால் மகாராணியை சூடான சாதம், சப்பாத்தி, ரொட்டி அல்லது நான் உடன் சேர்த்துப் பரிமாறினால் மிகவும் அருமையாக இருக்கும்!



Click it and Unblock the Notifications
