Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
வெங்காய வடை செய்யும் போது இந்த ஒரு பொருளையும் சேத்துக்கோங்க.. டேஸ்ட் இன்னும் அள்ளும்...
Crispy Onion Vada Recipe In Tamil: தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. மழை பெய்யும் போது நிச்சயம் அனைவருக்கும் நன்கு சூடாகவும், மொறுமொறுவென்றும் ஏதாவது சாப்பிட தோன்றும். அப்போது அனைவரும் வீடுகளில் வடை, பஜ்ஜி, போண்டா என்று செய்து சாப்பிடுவோம்.
அதுவும் நீங்கள் வெங்காய வடை செய்யப் போகிறீர்கள் என்றால், அந்த வடையின் சுவையை அதிகரிக்க, அத்துடன் ஒரு முட்டையை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி வெங்காய வடை செய்யும் போது முட்டை சேர்க்கும் போது சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை சேர்த்து வெங்காய வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை சேர்த்து செய்யும் வெங்காய வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 4
* முட்டை - 1
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1 கையளவு (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கடலை மாவு - 1 கப்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியத் துண்டுகளாக வெட்டிக்
கொள்ள வேண்டும்.
* பின் வெட்டிய வெங்காயத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக்
கொண்டு, கைகளால் நன்கு பிசைந்து, வெங்காயத்தை உதிர்த்து விட
வேண்டும்.
* பின்பு அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை,
கொத்தமல்லியை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள்
தூள், மிளகுத் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்க்க
வேண்டும்.
* பின்னர் அதில் கடலை மாவு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கைகளால்
நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின் லேசாக நீரை தெளித்து, வடை பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ள
வேண்டும்.
* அடுத்து பிசைந்த வடை கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி ஒரு
தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், உருட்டி வைத்துள்ள வடைகளை
சேர்த்து முன்னும் பின்னும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக பொரித்து
எடுத்தால், மொறுமொறுப்பான வெங்காய வடை தயார்.
Image Courtesy: HomeCookingShow



Click it and Unblock the Notifications









