Latest Updates
-
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
சப்பாத்திக்கு ஏற்ற க்ரீமி பன்னீர் சோயா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Creamy Paneer Soya Recipe In Tamil: உங்கள் வீட்டில் இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்பவும் உருளைக்கிழங்கு மசாலா, வெஜிடேபிள் குருமா, கிரேவி என்று தான் செய்வீர்களா? இப்படி ஒரே சைடு டிஷ்ஷை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோரும் வித்தியாசமான மற்றும் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சைடு டிஷ் கேட்கிறார்களா?

உங்கள் வீட்டில் மீல் மேக்கரும், பன்னீரும் உள்ளதா? அப்படியானால் அவ்விரண்டையும் கொண்டு ஒரு க்ரீமியான பன்னீர் சோயா செய்யுங்கள். இது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இப்படி சைடு டிஷ் செய்து கொடுக்கும் போது, உங்கள் பிள்ளைகள் வழக்கமாக சாப்பிடுவதை விட 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். மேலும் இந்த சைடு டிஷ் உடல் எடையைக் குறைக்க டயட்டில் நினைப்போருக்கு ஏற்ற ஒரு மிகச்சிறந்த ரெசிபியும் கூட.
இந்த க்ரீமி பன்னீர் சோயா ரெசிபி குறித்து சைனஸ் டைரி என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த க்ரீமி பன்னீர் சோயா ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே க்ரீமி பன்னீர் சோயா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 1 கப்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* பன்னீர் - 200 கிராம்
* வரமிளகாய் - 2
* பூண்டு - 5-8 பல்
* பால் - 100 மிலி
செய்முறை:
* முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரை போட்டு சிறிது நேரம் ஊற
வைக்க வேண்டும்.
* பின் நீரை வடிகட்டி விட்டு, மீல் மேக்கரில் உள்ள நீரை
பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் மீல் மேக்கரை சேர்த்து நன்கு ப்ரை செய்ய வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் பன்னீரை துண்டுகளாக்கி சேர்த்து, அத்துடன்
வரமிளகாய், பூண்டு பற்கள் மற்றும் பால் சேர்த்து நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* அதன் பின் அரைத்ததை மீல் மேக்கருடன் கிளறி, ஒரு கொதி வந்ததும்,
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான மற்றும் க்ரீமியான
பன்னீர் சோயா தயார்.



Click it and Unblock the Notifications