Latest Updates
-
கொங்குநாடு சின்ன வெங்காய சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கப்போகுதாம் -
சனிபகவான் வக்ர நிலை அடைவதால் டிசம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் இவங்கதான் -
தக்காளியுடன் இந்த பொருளை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
செட்டிநாடு ஏழுகறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இந்த மாதிரி நீங்க சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க -
இந்த 5 ராசிகளில் பிறந்தவர்களின் தன்னம்பிக்கை மலையை விட பெரிதாம் - இவங்க நினைச்சதை சாதிக்காம விடமாட்டாங்க -
10 வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி அருமையான புலாவ் செய்யுங்க - வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க -
உதட்டில் முத்தம் கொடுக்கும் போது கண்கள் ஏன் தானாக மூடுகிறது தெரியுமா? இதுல இவ்வளவு ரகசியம் இருக்கா? -
புதன் மிதுன ராசிக்குள் நுழைவதால் உருவாகும் பத்ர யோகம் இந்த 3 ராசிகளை ஜெயிக்கிற குதிரையாக மாத்தப்போகுதாம் -
இந்த 4 விஷயங்களை பின்பற்றுபவர்கள் சீக்கிரம் கோடீஸ்வரர் ஆவார்களாம் - சாணக்கியர் சொல்லும் வாழ்க்கை ரகசியம்
சப்பாத்திக்கு இந்த ஸ்டைல்-ல முட்டை கிரேவி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Egg Bhurji Gravy Recipe In Tamil: இரவு நேரத்தில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு அடிக்கடி முட்டையை சைடு டிஷ்ஷாக செய்வீர்களா? அதுவும் எப்பவும் ஒரே சுவையில் தான் முட்டை சைடு டிஷ் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை முட்டையை புர்ஜி போன்று செய்து, பின் கிரேவி செய்யுங்கள்.

இப்படி முட்டையை புர்ஜி செய்து பின் கிரேவியாக செய்யும் போது பார்க்க சற்று வித்தியாசமாகவும் இருக்கும், சுவையும் பிரமாதமாக இருக்கும். அதுவும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கும் போது, வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள். இந்த முட்டை புர்ஜி கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
இந்த முட்டை புர்ஜி கிரேவி குறித்து திண்டுக்கல் ஃபுட் கோர்ட் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த முட்டை புர்ஜ் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை புர்ஜ் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
முட்டை புர்ஜிக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* முட்டை - 4
* உப்பு - சிறிது
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* தக்காளி - 2
* பூண்டு - 5-7
* இஞ்சி - 1 இன்ச்
* கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* அரைத்த தக்காளி விழுது
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* முட்டை புர்ஜி
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் ஒரு பௌலில் 4 முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் சிறிது உப்பு
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அடித்து வைத்துள்ள முட்டை கலவையை வதங்கி கொண்டிருக்கும்
வெங்காயத்துடன் சேர்த்து, முட்டை புர்ஜி போன்று செய்து, மிளகுத் தூள்
தூவி கிளறி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் தக்காளி, பூண்டு, இஞ்சி, கசூரி மெத்தி
ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து
பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து, அத்துடன்
மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து, 3-5 நிமிடம் நன்கு
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில்
வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் முட்டை புர்ஜியை சேர்த்து கிளறி, குறைவான தீயில்
வைத்து, 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான
முட்டை புர்ஜி கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications