Latest Updates
-
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
சப்பாத்தி, பூரிக்கு இப்படி குருமா செய்யுங்க.. வழக்கமா சாப்பிடுறத விட எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Chapati Kurma Without Vegetables In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி, பூரி செய்வீர்களா? அதற்கு பெரும்பாலும் உருளைக்கிழங்கு மசாலாவைத் தான் சைடு டிஷ் செய்வீர்களா? இல்லாவிட்டால் வெஜிடேபிள் குருமா செய்வீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் வெங்காயம், தக்காளி தான் உள்ளதா? அப்படியானால் கவலை வேண்டாம்.

வெறும் வெங்காயம், தக்காளியைக் கொண்டே அருமையான சுவையில் சப்பாத்தி குருமாவை செய்யலாம். இந்த குருமா வெறும் சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த குருமா 10 நிமிடத்தில் சட்டென்று செய்யக்கூடியவாறு இருக்கும்.
இந்த சப்பாத்தி குருமா குறித்து ஸ்ரீதமிழ் சேனல் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த சப்பாத்தி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சப்பாத்தி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* தண்ணீர் - 1 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
பொடிப்பதற்கு...
* பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 3/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு
சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்ய வேண்டும்.
* பின் அதில் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை மற்றும் சோம்பை சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் பொடித்த பொட்டுக்கடலை மாவுடன், நீர் சேர்த்து கட்டிகளின்றி
கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அந்த பொட்டுக்கடலை கலவையை வதங்கி கொண்டிருக்கும் தக்காளியுடன்
சேர்த்து கிளறி, 1 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான
சப்பாத்தி குருமா தயார்.



Click it and Unblock the Notifications
