Latest Updates
-
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு!
எவ்வளவு கடினமாக உழைத்தாலும் பலன் கிடைக்கவில்லையா? அப்ப சாணக்கியரின் இந்த 5 விதிகளை ஃபாலோ பண்ணுங்க..
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த ராஜதந்திரி ஆவார். இவர் மனித வாழ்க்கை தொடர்பான அனைத்து முக்கியமான விஷயங்களையும் தனது நூலான சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். சாணக்கியரின் சிந்தனைகள் இன்றும் பலருக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்கின்றன.

ஒவ்வொருக்குமே தங்கள் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும், சிலருக்கு எதிர்பார்த்த வெற்றியோ, அங்கீகாரமோ கிடைப்பதில்லை, மாறாக தோல்வியை சந்திக்கின்றனர்.
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவருக்கு வெற்றி என்பது கடின உழைப்பால் மட்டுமின்றி, சரியான திட்டம், ஒழுக்கம், அறிவு, பொறுமை ஆகியவற்றாலும் கிடைக்கும். நீங்கள் உங்கள் வேலையில் சிறப்பாக செயல்பட நினைத்தால், சாணக்கியர் வழங்கும் 5 டிப்ஸ்களை பின்பற்றுங்கள். இதனால் தொழிலில் நல்ல வெற்றியுடன், முன்னேற்றத்தையும் காணலாம்.
1. மனவலிமை மிக்கவராகுங்கள்
பணியிடத்தில் அனைவருமே மன அழுத்தம், சவால்கள் மற்றும் போட்டியை சந்திக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பதட்டப்படாமல், நிதானத்தைக் கடைப்பிடித்து, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, நன்கு சிந்தித்து முடிவெடுப்பதே உண்மையான தொழில் வல்லுநரின் அடையாளம். மனவலிமை உள்ளவரால் மட்டுமே தொழிலில் சாதிக்க முடிவதோடு, நீண்ட காலத்திற்கு வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
2. யாருடனும் திட்டங்களை பகிராதீர்கள்
சாணக்கிய நீதிப்படி, எப்போதும் இலக்கை அடையும் வரை திட்டங்களை யாருடனும் பகிரக்கூடாது. பணியிடத்தில் கூட, உங்களின் திட்டங்களை மற்றவர்களிடம் சொல்வதற்கு பதிலாக, அதை அமைதியாக செய்து காட்டுங்கள். உங்களின் வேலையும், அதன் முடிவுகளும் தான் மற்றவர்களுக்கு உங்களின் திறமையை காட்டும்.
3. எந்த முடிவையும் கவனமாக எடுங்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, எந்த ஒரு வேலையையும் எப்போதும் சிந்திக்காமல் தொடங்கக்கூடாது. அதுவும் ஒரு முக்கியமாக முடிவை எடுக்கும் முன், அதன் நோக்கம், விளைவுகள் போன்றவற்றை மதிப்பிட வேண்டியது அவசியம். முக்கியமாக அலுவலகத்தில் ஒரு புதிய திட்டத்தை ஏற்கும் முன்பும், வேலையை மாற்றும் போதும் அல்லது புதிய பொறுப்பை ஏற்பதற்கு முன்பும், தெளிவாக சிந்தித்து திட்டமிட்டால், சிறந்த முடிவுகளைப் பெறலாம்.
4. வேலை மூலம் நற்பெயரை உருவாக்குங்கள்
ஒருவரது உண்மையான அடையாளம் அவரது செயல்கள் மூலமே தீர்மானிக்கப்படுகின்றன என்பதை சாணக்கியர் உறுதியாக நம்பினார். நீங்கள் தான் ஒரு வேலையை தொடங்கினாலும், அதை நேர்மையாகவும், ஒழுக்கமாகவும், கடினமாக உழைப்பதனாலும் மரியாதையை பெற்றுத் தரும். எனவே பணியிடத்தில் மற்றவர்களின் நம்பிக்கையையும், மரியாதையையும், உங்களின் நடத்தை மற்றும் வேலையின் முடிவுகள் மூலமே தீர்மானிக்கப்படுகின்றன.
5. கற்பனை செய்வதை நிறுத்தாதீர்கள்
சாணக்கியர் ஒருவரது அறிவை மிகப்பெரிய செல்வமாக கருதினார். புதுபுது விஷயங்களை கற்றுக் கொள்வதும், திறமைகளை தொடர்ந்து மேம்படுத்துவதும், தொழில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முக்கியமான செயல்களாகும். எனவே காலத்திற்கு ஏற்ப தன்னைத் தொடர்ந்து புதுப்பித்து கொள்பவருக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
