Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
சிக்கன் எடுத்தா.. இப்படி மசாலா அரைச்சு கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
Chicken Gravy Recipe In Tamil: விடுமுறை நாட்களில் காலை வேளையில் உங்கள் வீட்டில் பூரி, சப்பாத்தி தான் டிபனாக இருக்குமா? அதற்கு சைடு டிஷ்ஷாக சிக்கன் அல்லது மட்டனை தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை சிக்கன் வாங்கினால், வழக்கமாக செய்வது போன்று சிக்கன் கிரேவி செய்யாமல் மசாலா அரைத்து சேர்த்து கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 1/2 டீஸ்பூன்
வறுத்து பொடி செய்வதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 20
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
* மிளகு - 3/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (மெல்லியதாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 1/2 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* ஊற வைத்த சிக்கன்
* அரைத்து வைத்துள்ள மசாலா
* பச்சை மிளகாய் - 3
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் தயிர், மஞ்சள் தூள், மல்லித் தூள், காஷ்மீரி மிளகாய்
தூள், உப்பு கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி, 15 நிமிடம்
ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், 20 வரமிளகாய் மற்றும் காஷ்மீரி வரமிளகாயை சேர்த்து நன்கு
ப்ரை செய்ய வேண்டும்.
* பிறகு அதில் சோம்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* அடுத்து அதில் சீரகத்தை சேர்த்து பொரிய விட்டு, அனைத்து
பொருட்களையும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து,
1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, மூடி
வைத்து 2 நிமிடம் தக்காளியை வேக வைக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வெந்ததும், அதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து நன்கு 2
நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, கீறிய பச்சை
மிளகாயை சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் வைத்து, மூடி வைத்து 3-4
நிமிடம் சிக்கனில் இருந்து நீர் வெளியேறும் வரை நன்கு வேக வைக்க
வேண்டும்.
* சிக்கனில் இருந்து நீர் விட்டு வந்ததும், மூடியைத் திறந்து
வைத்தவாறு சிக்கனில் உள்ள நீர் ஓரளவு வற்றும் வரை 10-15 நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக தேங்காய் எண்ணெயை சூடேற்றி அதில் கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சிக்கனுடன் சேர்த்து கிளறி, சிக்கனை இறக்கினால், சுவையான
சிக்கன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
