Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1 கப் பாசிப்பருப்பு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Moongdal Sweet Paniyaram Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட ஸ்வீட் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அப்போது அவர்களுக்கு சத்தான அதே சமயம் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1 கப் பாசிப்பருப்பு உள்ளதா? அப்படியானால் அந்த பாசிப்பருப்பைக் கொண்டு அருமையான சுவையில் பணியாரம் செய்து கொடுங்கள். இந்த பாசிப்பருப்பு பணியாரம் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு இந்த பாசிப்பருப்பு இனிப்பு பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு இனிப்பு பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1 கப்
* தண்ணீர் - சிறிது
* நாட்டுச்சர்க்கரை - 3/4 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1/4
* உப்பு - 1 சிட்டிகை
* ஆப்ப சோடா - 1/4 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை
ஊற்றி 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து பாசிப்பருப்பில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு,
மிக்சர் ஜாரில் சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் நாட்டுச்சர்க்கரை மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்துக் கொண்டு, ஜாரில் 1/2
கப் நீரை ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் ஏலக்காய் தூள், உப்பு மற்றும் ஆப்ப சோடாவை சேர்த்து
நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில்
நல்லெண்ணெயை கொஞ்சமாக ஊற்றி, பின் கலந்து வைத்துள்ள மாவை குழிகளில்
ஊற்றி, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, பணியாரத்தை திருப்பிப் போட்டு, மீண்டும் 2-3
நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான மற்றும் சத்தான பாசிப்பருப்பு
இனிப்பு பணியாரம் தயார்.



Click it and Unblock the Notifications