Latest Updates
-
புதன் சொந்த ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்கு பண நெருக்கடியும், மன குழப்பமும் அதிகரிக்க போகுது.. உஷார்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் ஜூன் மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி பருப்பு கறி செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
உங்க சிறுநீரின் நிறம் இந்த 5 நிறங்களில் ஒன்றாக இருந்தால் நீங்க ஆபத்தில் இருக்கீங்கன்னு அர்த்தமாம் - ஜாக்கிரதை -
சாணக்கிய நீதி படி கணவன்-மனைவிக்குள் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா? -
முழங்கை மற்றும் முழங்கால் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்! -
June 2026 Horoscope: ஜூன் மாதம் இந்த 4 ராசிக்காங்க வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்கும் மாதமாக இருக்குமாம் -
சூரியனின் பார்வையால் ஜூன் முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கப்போகுது..! -
செஃப் தீனா ஸ்டைல் சிக்கன் தொக்கு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அசைவ உணவு அதிகம் உண்ணும் டாப் 10 இந்திய மாநிலங்கள் - முதலிடத்தில் எந்த மாநிலம் இருக்கு தெரியுமா?
சப்பாத்திக்கு ஏற்ற ஸ்வீட் கார்ன் மசாலா - இத ஒருடைம் செய்யுங்க.. குழந்தைங்க போட்டி போட்டு சாப்பிடுவாங்க..
Sweet Corn Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான காய்கறிகளைக் கொண்டு ஒரே சுவையில் தான் சைடு டிஷ் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு ஸ்வீட் கார்ன் என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் அந்த ஸ்வீட் கார்ன் கொண்டு மசாலா செய்யுங்கள்.

அதுவும் இந்த ஸ்வீட் கார்ன் உடன் குடைமிளகாயையும் சேர்த்து மசாலா செய்யும் போது, சுவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இப்படி மசாலா செய்யும் போது வீட்டில் உள்ளோர், முக்கியமாக குழந்தைகள் சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவதோடு, அதிகமாகவும் சாப்பிடுவார்கள்.
இந்த ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி குறித்து திண்டுக்கல் ஃபுட் கோர்ட் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த ஸ்வீட் கார்ன் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்குவதற்கு...
* நெய் - 1 டீஸ்பூன்
* வேக வைத்த ஸ்வீட் கார்ன் - 1 கப்
* குடைமிளகாய் - 1/2 (பெரிய துண்டுகளாக்கப்பட்டது)
* தக்காளி - 1/2 (பெரிய துண்டுகளாக்கப்பட்டது)
* வெங்காயம் - 1/2 (பெரிய துண்டுகளாக்கப்பட்டது)
அரைப்பதற்கு...
* ஊற வைத்த முந்திரி - 10
* தக்காளி - 1
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* அரைத்த விழுது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
உருகியதும், வேக வைத்த ஸ்வீட் கார்ன்னை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை
சேர்த்து குறைவான தீயில் வைத்து, 2-4 நிமிடம் நன்கு வதக்கி, ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த 10 முந்திரி, நறுக்கிய 1
தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு
பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து கிளறி, இஞ்சி
பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம்
மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீரை ஊற்றி
மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் வதக்கி வைத்துள்ள ஸ்வீட் கார்ன், குடைமிளகாய்,
வெங்காயம், தக்காளியை சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில்
வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான
ஸ்வீட் கார்ன் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications