Latest Updates
-
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா
என்ன செய்தாலும் நீங்கள் செய்யும் உருளைகிழங்கு மசாலா மட்டும் சுவையாகவே இருக்காதா? அப்படியானால் இன்று நாங்கள் கொடுத்துள்ள ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலாவை வீட்டில் முயற்சித்துப் பாருங்கள்.
இன்று காலை உங்கள் வீட்டில் பூரி அல்லது சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கு மசாலாவை தான் விரும்பி சாப்பிடுவார்களா? என்ன செய்தாலும் நீங்கள் செய்யும் உருளைகிழங்கு மசாலா மட்டும் சுவையாகவே இருக்காதா? அப்படியானால் இன்று நாங்கள் கொடுத்துள்ள ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலாவை வீட்டில் முயற்சித்துப் பாருங்கள். இந்த பூரி மசாலா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, மிகவும் ருசியாகவும் இருக்கும். மேலும் இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* இஞ்சி - 1 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2-3
* கறிவேப்பிலை - சிறிது
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 10
* கடலை மாவு - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை நீரில் கழுவி, குக்கரில் போட்டு குக்கரை மூடி அடுப்பில் வைத்து 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை கழுவி, தோலை உரித்துவிட்டு, கத்தியால் துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் முந்திரியை பொடியாக நறுக்கி போட்டு வதக்க வேண்டும்.
* அதன் பின் வெங்காயம், பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் கடலை மாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அதன் பின் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நீரை ஊற்றி கிளறி, குறைவான தீயில் வைத்து 4-5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி, நீரை ஊற்றி குறைவான தீயில் வைத்து, 4-5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
* பின் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா தயார்.
Image Courtesy: vegrecipesofindia



Click it and Unblock the Notifications
