Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்... க்ரீமி மலாய் பன்னீர்
உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அவர்களுக்கு இன்று ஒரு சர்பிரைஸ் செய்ய நினைத்தால், க்ரீமி மலாய் பன்னீரை செய்து கொடுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அவர்களுக்கு இன்று ஒரு சர்பிரைஸ் செய்ய நினைத்தால், க்ரீமி மலாய் பன்னீரை செய்து கொடுங்கள். இந்த மலாய் பன்னீர் ரெஸ்டாரண்ட்டுகளில் சாப்பிட்ட ஒரு உணர்வைத் தரும். மேலும் இந்த மலாய் பன்னீர் செய்வது மிகவும் சுலபம். 20 நிமிடத்தில் செய்துவிடலாம். பேச்சுலர்களும் இந்த க்ரீமி மலாய் பன்னீரை செய்யலாம். அந்த அளவில் இதன் செய்முறை சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு க்ரீமி மலாய் பன்னீர் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே க்ரீமி மலாய் பன்னீர் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
* பாதாம் - 3 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 3 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் -1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* க்ரீம் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் அதில் பன்னீரைப் போட்டு பொன்னிறமாக ஃப்ரை செய்து, சுடுநீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதே சமயம் முந்திரி மற்றும் பாதாமை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதையும் அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பிறகு அதில் பாதாம் முந்திரி பேஸ்ட் சேர்த்து கிளறி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
* பின் சிறிது நீரை ஊற்றி, பன்னீர் துண்டுகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி 20 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் கசூரி மெத்தி மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்கி, க்ரீமை சேர்த்து கிளறினால், சுவையான க்ரீமி மலாய் பன்னீர் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











