Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
வீட்டிலேயே சோலா பூரியும், சன்னா மசாலாவும் எப்படி சிம்பிளா செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...
Chola Poori And Channa Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சோலா பூரி என்றால் ரொம்ப பிடிக்குமா? எப்போது ஹோட்டல் சென்றாலும் அதை தான் ஆர்டர் செய்து சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைக்கிறீர்களா?
அப்படியானால் அவர்கள் விரும்பி சாப்பிடும் அந்த சோலா பூரி மற்றும் சன்னா மசாலாவை செய்து கொடுங்கள். இந்த இரண்டும் செய்வது சுலபம் தான். ஆனால் என்ன கொஞ்சம் நேரம் எடுக்கும். இருப்பினும், இதை ஒருமுறை செய்தால், வயிறு நிறைய விரும்பி சாப்பிடுவார்கள் அல்லவா? எனவே ஒருமுறை இதை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.

உங்களுக்கு சோலா பூரி மற்றும் சன்னா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சோலா பூரி மற்றும் சன்னா மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சோலா பூரிக்கு...
* மைதா - 200 கிராம்
* ரவை - 50 கிராம்
* உப்பு - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* தயிர் - 50 மிலி
* பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
சன்னா மசாலாவிற்கு...
சன்னா வேக வைப்பதற்கு...
* வெள்ளை கொண்டைக்கடலை - 200 கிராம்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - சிறிது
* பிரியாணி இலை - 1
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 4 (நறுக்கியது)
* தக்காளி - 4 (நறுக்கியது)
* இஞ்சி - 3 மீடியம் சைஸ் துண்டு
* பூண்டு - 10 பல்
* முந்திரி - 10
* உப்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கொண்டைக்கடலையை நீரில் குறைந்தது 8 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை, உப்பு, சர்க்கரை, தயிர்,
பேக்கிங் சோடா சேர்த்து கைகளால் பிரட்டி, சிறிது நீரை ஊற்றி, பூரி
மாவு பதத்திற்கு பிசைந்து, மூடி வைத்து 1 மணிநேரம் ஊற வைத்துககொள்ள
வேண்டும்.
* பின்பு குக்கரில் ஊற வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து, அத்துடன் சன்னா
மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து அடுப்பில்
வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, கொண்டைக்கடலையை தனியாக எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, கல்பாசி,
பிரியாணி இலை, சீரகம், சோம்பு, மல்லி, மிளகு சேர்த்து வறுக்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு மற்றும்
முந்திரி ஆகியவற்றை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும்
வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து,
உப்பு தூவி நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி
விட்டு, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தேவையான அளவு நீரை
ஊற்றி, வேக வைத்துள்ள சன்னாவையும் சேர்த்து, கெட்டியாகும் வரை கொதிக்க
வைத்து, 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கிளறி ஒரு கொதி வந்ததும்,
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சன்னா மசாலா தயார்.
* பிறகு ஊற வைத்துள்ள மாவை ஓரளவு பெரிய உருண்டைகளாக உருட்டி, பூரி
பதத்திற்கு தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி, தேய்த்து வைத்துள்ள மாவை ஒவ்வொன்றாக சேர்த்து
பொரித்து எடுத்தால், சுவையான சோலா பூரி தயார்.



Click it and Unblock the Notifications











