இந்த 6 பொருள் இருந்தா போதும்... ஈஸியா சாக்லேட் மக் கேக் செஞ்சுடலாம்...

Posted By:

Chocolate Mug Cake Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ஓவன் உள்ளதா? உங்கள் குழந்தைகள் கேக்கை விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் இதுவரை நீங்கள் உங்கள் வீட்டில் கேக் எதையும் முயற்சித்தது இல்லையா?

அப்படியானால் வேகமாகவும், அதே வேளையில் செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கக்கூடிய ஒரு அற்புதமான சாக்லேட் மக் கேக் செய்யுங்கள். இந்த கேக் செய்வதற்கு 6 பொருட்கள் இருந்தால் போதும். சீக்கிரம் செய்துவிடலாம். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Chocolate Mug Cake Recipe

உங்களுக்கு சாக்லேட் மக் கேக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சாக்லேட் மக் கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ட்ரை மிக்ஸ்...

* கோதுமை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
* பனங்கற்கண்டு - 4 டேபிள் ஸ்பூன்
* கொக்கோ பவுடர் - 2 டேபின் ஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்

வெட் மிக்ஸ்...

* பால் - 4 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வென்னிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவு, பனங்கற்கண்டு, கொக்கோ பவுடர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் வென்னிலா எசன்ஸ் சேர்த்து கட்டிகளின்றி நன்கு க்ரீமியாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஓவனில் வைக்க ஏற்ற ஒரு மக்/கப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் தயாரித்து வைத்துள்ள கேக் கலவையை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ப்ரீஹீட் செய்யப்பட்ட ஓவனில் இந்த மக்கை வைத்து 180 டிகிரி செல்சியஸில் வைத்து 20 நிமிடம் பேக்கிங் செய்ய வேண்டும். கேக் தயாராகிவிட்டதா என்பதை, ஒரு டூத்பிக் கொண்டு குத்திப் பார்க்கும் போது, அதில் மாவு ஒட்டியிருந்தால், மீண்டும் ஓவனில் சில நிமிடங்கள் பேக்கிங் செய்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான சாக்லேட் மக் கேக் தயார்.

குறிப்பு:

* இந்த கேக் செய்வதற்கு கோதுமை மாவு மற்றும் பனங்கற்கண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. வேண்டுமானால் அதற்கு பதிலாக மைதா மற்றும் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.
* இங்கு கூறப்பட்டுள்ள நேரம் ஓவனுக்கு உரியது. மைக்ரோவேவ்-க்கு அல்ல.
* உங்களுக்கு கேக் இனிப்பாக வேண்டுமானால், கூடுதலாக இனிப்பை சேர்த்துக் கொள்ளலாம்.
* விருப்பமிருந்தால், அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் சாக்கோ சிப்ஸை சேர்த்துக் கொள்ளலாம். இது இன்னும் அற்புதமாக இருக்கும்.

Image Courtesy: sharmispassions

[ of 5 - Users]
Story first published: Friday, December 22, 2023, 17:49 [IST]
Desktop Bottom Promotion