அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இந்த மாதிரி சிக்கன் கிரேவி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...

Posted By:

Chicken Tikka Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கினால் அதை எப்போதும் ஒரே சுவையில் தான் செய்து சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் சிக்கனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் சிக்கன் டிக்கா மசாலாவை செய்யுங்கள்.

இந்த சிக்கன் டிக்கா மசாலா சப்பாத்தி, பூரி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதுவும் இந்த சிக்கன் மசாலாவை ஒருமுறை செய்தால் வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

Chicken Tikka Masala How To Make a Chicken Tikka Masala Recipe

உங்களுக்கு சிக்கன் டிக்கா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் டிக்கா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ
* கெட்டித் தயிர் - 1/2 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்ழுன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன் + 1/4 கப்

கிரேவிக்கு....

* எண்ணெய் - 1 1/4 டேபிள் ஸ்பூன்
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3/4 டீஸ்பூன்
* தக்காளி - 3 (அரைத்தது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டேபிள் ஸ்பூன்
* சுடு தண்ணீர் - தேவையான அளவு
* பிரஷ் க்ரீம் - 3/4 கப்

செய்முறை:

* முதலில் எலும்பில்லாத சிக்கனை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள கெட்டித் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 1/2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, கைகளால் நன்கு அழுத்தி பிசைந்து, மூடி வைத்து ஃப்ரிட்ஜ்ஜில் 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்ததும், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு 1/4 கப் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து முக்கால்வாசி வேகும் வரை ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, பின் அதில் சிக்கன் ப்ரை செய்த எண்ணெயை 1 1/4 டேபிள் ஸ்பூன் ஊற்றி, அத்துடன் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, இஞ்சி பூண்டு பேஸ்ட்டையும் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
* மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்ததும், அதில் சர்க்கரை மற்றும் கசூரி மெத்தியைத் தூவி நன்கு கிளறி, ப்ரை செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* மசாலா அனைத்தும் சிக்கனுடன் சேர்த்து எண்ணெய் பிரியத் தொடங்கியதும், அதில் கிரேவிக்கு தேவையான அளவு சுடுநீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் பிரஷ் க்ரீம்மை சேர்த்து கிளறி, மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான சிக்கன் டிக்கா மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, April 9, 2025, 15:25 [IST]
Desktop Bottom Promotion