Latest Updates
-
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க..
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்..
Chicken Milagu Gravy Recipe In Tamil: தற்போது காலநிலை அடிக்கடி மாறுவதால் பலரும் சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுவதுண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நன்கு காரசாரமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். அதுவும் சிக்கனை வாங்கி வந்து மிளகு கிரேவியை செய்து சாப்பிட்டால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.

முக்கியமாக இந்த சிக்கன் மிளகு கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். மழைக்காலங்களில் இப்படியான கிரேவியை செய்து சுவைக்கும் போது உடலுக்கு இதமாக இருக்கும்.
உங்களுக்கு இந்த சிக்கன் மிளகு கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் மிளகு கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கல்பாசி - சிறிது
* அன்னாசிப்பூ - 1
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* வரமிளகாய் - 5
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 5
* இஞ்சி - 1 மீடியம் அளவு துண்டு
* பூண்டு - 5 பல்
* தேங்காய் - 2 சில்லு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 4
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* சிக்கன் - 1 கிலோ
* அரைத்த மசாலா
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கல்பாசி,
அன்னாசிப்பூ, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய், மல்லி, முந்திரி, இஞ்சி,
பூண்டு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை,
பச்சை மிளகாய் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கண்ணாடி பதத்திற்கு
வெங்காயம் வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, நறுக்கிய தக்காளியை
சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1 கிலோ சிக்கனை நீரில் நன்கு கழுவி சேர்த்து 5
நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, கிரேவிக்கு தேவையான அளவு
நீரை ஊற்றி கிளறி, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, எண்ணெய்
பிரிந்து வந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால்,
சுவையான சிக்கன் மிளகு கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
