Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. 3 வேளையும் வெச்சு சாப்பிடுவீங்க..
Chicken Gravy Recipe In Tamil: ஞாயிற்றுக் கிழமை வந்தாலே, அனைவரது வீட்டிலும் அசைவ உணவுகளை வாய்க்கு ருசியாக சமைத்து, பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிட நினைப்போம். அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான இறைச்சியை வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டு மகிழ்வோம். அதுவும் உங்கள் வீட்டில் எப்போதும் சிக்கனை தான் வாங்கி சமைத்து சாப்பிடுவீர்களா?
எப்போதும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ் செய்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ள சுவையில் சிக்கன் கிரேவியை செய்யுங்கள். இப்படி கிரேவியை செய்யும் போது மூன்று வேளையும் வைத்து சாப்பிடுவீர்கள். இந்த கிரேவி வீட்டில, தோசை, பிரியாணி என அனைட்ததுடனும் சாப்பிட அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1/2 கிலோ
* உப்பு - சுவைக்கேறப்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 1
* தேங்காய் - 1/4 மூடி
* சின்ன வெங்காயம் - 10
* முந்திரி - 10
* கசகசா - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் முந்திரி மற்றும் கசகசாவை ஒரு கிண்ணத்தில் எடுத்து,
சிறிது சுடுநீரை ஊற்றி, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய சிக்கனுடன் உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட்,
மஞ்சள் தூள், தயிர் சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 1/2 மணிநேரம்
ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், தேங்காய், சின்ன
வெங்காயம், ஊற வைத்த முந்திரி, கசகசா, மிளகு, சோம்பு, சீரகம்
ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து, வெங்காயத்தை பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து சிறிது நேரம் வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் இஞ்சி
பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, நன்கு 3-4 நிமிடம்
கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி 3
நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக குக்கரை மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியை தூவி
கிளறினால், சுவையான சிக்கன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications