Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மசாலா எதுவும் சேர்க்காம ஒருமுறை சிக்கனை இப்படி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் செமயா இருக்கும்...
Chicken Chinthamani Recipe In Tamil: விடுமுறை நாட்களில் தான் நமக்கு பிடித்தவாறு சமைத்து, பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிட முடியும். நீங்கள் சிக்கன் பிரியர் என்றால், அந்த சிக்கனை பலவாறு சமைத்து சாப்பிட விரும்புவீர்கள். அதற்காக ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு டிஷ்ஷை முயற்சிப்பீர்கள்.
இந்த வாரம் சிக்கனைக் கொண்டு எப்படி புது டிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் சிக்கன் சிந்தாமணியை செய்யுங்கள். இந்த ரெசிபிக்கு எந்த ஒரு மசாலாவும் தேவையில்லை மற்றும் குறைவான பொருட்களே போதுமானது. இந்த சிக்கன் சிந்தாமணி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு சிக்கன் சிந்தாமணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் சிந்தாமணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 3/4 கிலோ
* சின்ன வெங்காயம் - 300 கிராம்
* வரமிளகாய் - 15
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 3 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் சின்ன வெங்காயத்தை மிகவும் பொடியாச நறுக்கிக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் வரமிளகாயை இரண்டாக உடைத்து, அதில் உள்ள விதைகளை
நீக்கிவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அதைத் தொடர்ந்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து முதலில் 5
நிமிடம் நீர் விடும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, சிக்கனை ஒருமுறை கிளறி விட்டு, 15 நிமிடம்
மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைக்கும் போது,
அடிப்பிடிக்காமல் இருக்க மூடியைத் திறந்து சிக்கனை அவ்வப்போது கிளறி
விட வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் மிளகுத் தூள் மற்றும்
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான சிக்கன் சிந்தாமணி
தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











