Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
செட்டிநாடு வர மிளகாய் துவையல் ரெசிபி...இந்த மாதிரி செஞ்சு பாருங்க..இட்லி, தோசைக்கு சுருக்குனு செமயா இருக்கும்!
Chettinad Vara Milagai Chutney Recipe in Tamil: நம் தமிழ்நாட்டில் ஊருக்கு ஊர் விதவிதமாய் வித்தியாசமாய் உணவு வகைகளும் பலகாரங்களும் இருக்கின்றன. ஒரு ஊர் விட்டு இன்னொரு ஊருக்கு சென்றால் அவர்களின் பேச்சு வழக்கோடு பாரம்பரிய உணவு வகைகளும் மாறுபடும். ஒவ்வொரு உணவின் பெயர் மாறுவதோடு அவற்றின் சுவையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அந்த வரிசையில் செட்டிநாடு உணவுகளுக்கு என்று ஒரு தனி இடம் இருக்கிறது மக்களிடம். கடைகளின் பெயரில் கூட செட்டிநாட்டு உணவகம் என்று குறிப்பிடும் அளவிற்கான தனிச்சிறப்பு அது. செட்டிநாடு உணவுகளில் சட்னி வகைகளுக்கு தனியிடம் உண்டு. குறிப்பாக செட்டிநாடு வர மிளகாய் துவையல் அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும். இது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு வர மிளகாய் துவையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு வர மிளகாய் துவையலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
- 10 காஷ்மீரி சிவப்பு மிளகாய்
- 5 சிவப்பு மிளகாய்
- 15 சின்ன வெங்காயம்
- 10 பல் பூண்டு
- 1 ஸ்பூன் புளி
- தேவையான அளவு கல் உப்பு
தாளிக்க:
- 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு மிக்ஸி ஜாரில் 10 காஷ்மீரி சிவப்பு மிளகாயுடன் 5 வர மிளகாயைச் சேர்க்கவும்.
- பின்னர்15 சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும்.
- 10 உரித்த பூண்டு பற்களைச் சேர்க்கவும்.
- தேவையான அளவு கல் உப்பைச் சேர்க்கவும்.
- ஒரு டீஸ்பூன் புளிச்சாறு சேர்க்கவும்.
- இறுதியாக சிறிது தண்ணீர் சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெயை சூடாக்கி, ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்து வெடிக்க விடவும், பின்னர் சில கறிவேப்பிலைகளைச் சேர்த்து தாளிக்கவும்.
- தயார் செய்த மிளகாய் விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5 அதன் பச்சை வாசனை போகும் வரை சமைக்கவும்.
- இறுதியாக ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் காரசாரமான செட்டிநாடு வர மிளகாய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
